ஊடகங்கள் ஏன் விலை போயின

ஊடகங்கள் ஏன் விலை போயின ?

ஊடகங்கள் ஏன் இப்படி விலை போயின ? தொலைக்காட்சிகள்எதை எதை விளம்பரம் செய்வது என்ற வரை முறையே இல்லாமல் போய்விட்டதா ? பணம் வைத்து சூதாடினால் சட்டப்படி குற்றம் என்று கை விலங்கு பூட்டி சிறையில் தள்ளும் காவல் துறை இணையதளம் மூலமாக சூதாடுவதை எப்படி அனுமதிக்கிறது ?

லாட்டரி சீட்டினால் எவ்வளவு எவ்வளவு குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன என்று தெரிந்து தான் அரசு நம் மாநிலத்தில் லாட்டரி சீட்டை தடை செய்து ஆணை பிறப்பித்தது

ஆனால் இப்போதோ ஊடகங்கள் விளம்பரம் என்ற பேரில் நஞ்சை தூவி வருகிறது பணம் வைத்து சூதாட தூண்டி வருகிறது பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சிகள் " ரம்மி சர்க்கிள் டாட் காம்" என்ற இனைய தள சூதாட்டத்தை பிரபலப்படுத்தி வருகிறது

அழிந்தது போதாதா இன்னும் அழிய வேண்டுமா ? விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்ட வேண்டியதுதான் ஆனால் ஒருதலைமுறையை அழித்து வருவாய் ஈட்ட வேண்டுமா யோசியுங்கள்

மத்திய ஒளிபரப்பு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ? எதை எதை விளம்பரம் செய்யலாம் என்ற வரையறை ஏதும் செய்ய வில்லையா ? இப்படிப்பட்ட தொலைக்காட்சி களை தடை செய்ய வேண்டாமா?

இன்று இணையதள சூதாட்டத்தை விளம்பரம் செய்யும் தொலைக்காட்சிகள் நாளை விபச்சாரத்தை விளம்பரம் செய்யாது என்று என்ன நிச்சயம் ?

இப்படியே போனால் துப்பாக்கிகள் ஆயுதங்கள் போன்றவற்றை விளம்பரம் செய்யும் துணிவு இந்த தொலைக்காட்சிகளுக்கு வந்துவிடும் ஆனால் அழிய போவதென்னவோ நாமும் நம் மக்களும் தான்

அரசு அதற்குள்ளாக விழித்துக்கொள்ளுமா ? நாமாவது இந்த விழிப்புணர்வை பகிர்ந்து மக்களிடம் சேர்ப்போமே செய்வோமா ?

எழுதியவர் : சமூகம் (12-Jan-17, 10:56 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 145

மேலே