என் நண்பன்

உயிர்த்தோழமையின் உருவகம் -நீ
உன்னதமான நட்பை உணரவைத்தவனும் -நீ

காதலியினும் மேல் என்னை காதலித்தவனே
அன்னைக்கு நிகராய் அன்பை பொழிந்தவனே

தவறு என்றால் தட்டி முறைத்தவனே
சரி என்றால் சமமாக பக்கம் நின்றவனே

பள்ளி வாழ்கையில் (13 வருடம் )

நம் மிதிவண்டி பயணங்கள்
அளவில்லாத அரட்டைகள்
அவ்வப்போது ஆலோசனைகள்
அடிக்கடி உரசல்கள்
அணையாத மதமோதல்கள்
செல்ல சண்டைகள்

இனி வருமா ?

கல்லூரி வாழ்வு நம்மை பிரித்தது

கலையில் ஆர்வம் கொண்ட நானோ தொழிற்கல்லூரியில்
தொழிற்கல்வியில் ஆர்வம் கொண்ட நீயோ கலைக்கல்லூரியில்

காலத்தின் கோலத்தில்
என்னுள் ஓர் வெறுமை
உன் இடம் எவரும் நெருங்க முடியாது
விதி நீயும் இனி அதில் நுழைய முடியாது
வெளியில் சொல்லி ஆறுதல் பெற
--உன் போல் ஆள் இல்லையடா -என் நட்பே

காதலுக்கே கண்ணீர் சிந்தாத காலம் இது
நட்புக்கு கண்ணீர் சிந்த வைத்த

-இஸ்லாத்து இளைஞனே

எழுதியவர் : மணிவேல் .A (13-Jan-17, 7:00 pm)
சேர்த்தது : மணிவேல்
Tanglish : en nanban
பார்வை : 888

மேலே