தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
@*@@*@*@*@*@*@**@*@*@*@*

திருவள்ளுவராண்டு 2048- தை 1 ( 14.01.2017 )
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

இனிய உழவர்த் திருநாள் வாழ்த்துக்கள் ...
பசுக்களை வணங்கிடும் மாட்டுப் பொங்கல் விழா
உறவுகளை நட்புகளை காண்கின்ற காணும் பொங்கல்
திருவள்ளுவர்த் திருநாள் .....

இவ்வாறு அனைத்து நல்ல விழானாட்களும் இணைந்து வர்ந்திடும் இந்த " திருவிழா வாரம் " ஒவ்வொரு தமிழருக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் விழா .

பகையுணர்வு நீங்கி
நட்புணர்வு மேலோங்கி
அன்பை நெஞ்சில் நிறுத்தி
ஆற்றலை மேலும் வளர்த்தி
அறிவையும் அதிகம் பெருக்கி
இரக்கத்தை மனதில் இருத்தி
லஞ்ச லாவண்யங்களை ஒழித்தி
சீர்கெட்ட சமு்தாயத்தை சீர்படுத்தி
மதமாச்சர்யங்கள் மறந்த சமூகமாக்கி
சாதிவெறி ஒழிய இணைந்துப் பணியாற்றி
ஏழை பணக்காரன் இல்லாத சமுதாயமாகி
இல்லாமை கல்லாமை கடுகளவும் இல்லாது
பொல்லாமை நீங்கி வெள்ளாமை பெருகிட்டு
இறுதி தமிழனும் உள்ளவரை உற்சாகமாய்
உள்ளவரை உவகையுயடன் வாழ்ந்திடவே
உறவுகள் நண்பர்கள் கவிஞர்கள் கவிதாயினிகள்
அனைவருக்கும் எனது
இனிய தமிழ் புத்தாண்டு
மற்றும்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ...

அல்லவை அகலட்டும்
நல்லவை கூடட்டும்
இன்பமே பெருகட்டும்
இதயம் மகிழட்டும்
தலைமுறை தழைக்கட்டும்
தமிழினம் பெருமைப்பட வாழட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Jan-17, 11:04 pm)
பார்வை : 1435

மேலே