காதல்- நினைவெல்லாம் என் நிலா

நெஞ்சோரத்தில் உன் ஞாபகம்
கடிகாரத்தில் உன் வாக்கியம்...!
இதழோரத்தில் தேன் மழை
இதயத்தில் காதல் கலை...!

இதழ்வரியில் வாசிக்கவா
இதய அறையில் சுவாசிக்கவா...!
ஒளி வீசி உன் அழகை தேடுகிறேன்
விழி அசைவில் உன் பெயரை பாடுகிறேன்...!

ஆலமரத்தில் ஆடவா
ஆழ்மனதில் உறங்கவா...!
இலை போல் பறக்கவா
ஈகை காதல் தெளிக்கவா...!

நாணலாய் நெருங்குகிறேன்
உன் மார்பில் தலை சாய்க்கிறேன்..!
என் பகல் கனவின் தேவதையாய்
நினைவெல்லாம் என் நிலா...!

J.K.பாலாஜி.

எழுதியவர் : J.K.பாலாஜி (13-Jan-17, 11:45 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 306

மேலே