காதல் தோல்வி

ரசனையான சித்திரம் அதில்
லயித்திட்டது அவள் சித்தம்

பிரிந்திட மனமில்லாது பித்தானதில்
உரித்தாக்கினாள் உரியது உய்த்து

எண்ணங்கள் என்னென்னவோ ஓடியதில் - ஓவியத்தில்
வண்ணங்கள் வகைவகையாய் வரைந்திட்டாள்

ஒவியமோ
மனம் போன போக்கில் மாற்றம் கண்டது
தினம் தினம் புது புது தோற்றம் கொண்டது

ஒருநாள்
மொத்தமாய் மாறிய ஓவியம் கண்டு
சத்தமாய் கத்தியே கண்ணீர் விட்டாள்

விரும்பிய சித்திரம் இதுவல்லவென்று
பழித்து கிழித்து கழித்திட்டாள்

பெண்ணே சித்திரத்தில் இல்லையடி சிக்கல்
உந்தன் சிந்தனையில் எனயறியாயோ

ஓவியம் அவளிடம் உருகுலைந்த்தில் - கண்ணீர்
காவியம் படைக்க காரணியாயிற்று

எழுதியவர் : (14-Jan-17, 6:45 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 892

மேலே