சூபி கதை

பணம்.

ஒரு சூபி ஞானிக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பதற்காக செல்வந்தர் ஒருவர் வந்தார். ஆனால் ஞானி அதை வாங்கிக் கொள்ளவில்லை.
அவர் சொன்னார்.
“ எனக்கு உங்கள் பணம் தேவையில்லை. என்னிடம் ஒரே ஒரு நாணயம் இருக்கிறது ”.
செல்வந்தர் சொன்னார்.
“ அந்த ஒரு நாணயம் உங்களுக்கு எத்தனை நாளைக்கு வரும். அது மிகவும் அற்பமான தொகை ”.
ஞானி பதில் சொன்னார்.
“ என்னிடம் இருக்கும் இந்த ஒரு நாணயம் தீரும்வரை நான் உயிருடன் இருப்பேன் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அப்படி உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் கொடுக்கும் இந்தப் பணத்தை நான் வாங்கிக் கொள்கிறேன் ”.

ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் – யூமா வாசுகி – பக்கம் – 105 – 106.
தகவல்; ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (16-Jan-17, 9:25 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : ssobi kathai
பார்வை : 335

மேலே