காத்திருப்பு

வழி மேல்
விழி வைத்து
விழியில்
உன்னுருவம் வைத்து

உன்னுருவை மட்டுமே
உள்ளத்தில் வைத்து
உள்ளம் முழுதும்
உனக்காகவே உருக வைத்து

காத்திருத்தல்
மிகச் சுகமே
அதில் லயித்திருத்தல்
இன்பம் தருமே

பார்த்திருத்தல்
கூட நலமே
பார்க்காமல் நினைத்திருந்தால்
துன்பம் ஓடுமே

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Jan-17, 10:17 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kaathiruppu
பார்வை : 644

மேலே