ஏன் நட்புக்கு வரலாறு

என் முயற்சிக்கு முதல் ஆக்கம் நீயடா
நீ ஒரு ஏணி படி என நின்னைத்தவருக்கு
லிப்ட்(lift )டாய் மாறினாய் நட்பு எனும் மின்சாரம் கொண்டு

என் நிழலும் வெளிச்சத்தில் மட்டும் தான் வரும்
இருட்டில் வராமல் என்னை விட்டுவிடும்
எனக்கான விடாமல் வருவது உன் நட்புடா

என் முயற்சிக்கு முதல் ஆக்கம் நீயடா
நேற்று பேசும் போதும் தொலைத்தொடர்பு தடை செய்தது
பேசும் வார்த்தைகளை கொண்டு விடைபெற்று சென்றது
நீ தான் என் நட்பு என்று

மேலே செல்ல செல்ல மேகமும் கரையும்
வானமும் மறையும்
நீயும் நானும் பார்க்காமல் இருந்தாலும்
கரையாது மறையாது நட்பு

உலகம் தோன்றிய காலம் முதல்
நட்பு எனும் பெயர் தான் இருந்தது
நீயும் நானும் சேர்த்த பிறகு தான்
நட்புக்கு உருவம் கிடைத்தது

இன்றோ என் நட்புக்கு உருவம் கிடைத்த நாள்
உன் பிறந்த நாள் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இரா.வினோத் குமார்

மு.க.ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (16-Jan-17, 10:36 am)
பார்வை : 568

மேலே