தலைவரு என்றால் என்ன

#சிரிக்க_சிந்திக்க...

தம்பி ஒருத்தர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்..

தம்பி:- அண்ணே! இந்த செயல் தலைவர், கட்சித் தலைவர் அப்படினு எல்லா இடத்திலும் கட்டவுட், பனர்களெல்லாம் வைத்திருக்காங்களே..
தலைவர் என்றால் என்னங்கண்ணா??

நான்:- நல்ல கேள்வி தம்பி. இன்றைய நடைமுறையில், எவனொருவனால் நாட்டில் தனியாளாக வெளியில் சென்று நடமாடிவிட்டு வர முடியாதோ அவனுக்குப் பெயர்தான் தலைவன்...

தம்பி:- புரியுறமாதிரி சொல்லுங்கண்ணே..

நான்:- சொல்கிறேன் டா தம்பி. இப்போ நீயோ, நானோ வெளியூர் செல்ல வேண்டுமென்றால் தனியாக சென்றுவிட்டு வருவோம்..
ஆனால், சிலரால் அப்படி செல்ல இயலாது..
அவர்களுக்கென்று ஒரு கூட்டம் தேவைப்படுகிறது..
தனக்கு தானே விளம்பரம் செய்வார்கள்...
கூட இருப்பவர்களே எப்போது காலை வாரிவிடுவார்களென்று தெரியாது. கூட்டமில்லாமல் எங்கும் செல்ல முடியாது..
இப்போ புரியுதா தம்பி..

தம்பி:- புரியுது தலைவா. யு ஆர் கிரேட்..

நான்:- ( இவனுக்கு புரிந்ததும் நம்மளலேயே கல்லாய்க்கிறதே வேலையாகிவிட்டது) என்னடா அண்ணனைப் பார்த்து ஒரு மட்டு மரியாதை இல்லாம தலைவானு சொல்லிட்ட...

தம்பி:- என் செல்ல அண்ணா, ஐ எம் சாரி...

நான்:- சரி, சரி ஐஸ் வைச்சது போதும். ரொம்ப குளிருது தம்பி..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-17, 1:27 pm)
பார்வை : 696

மேலே