நட்பு

தங்கத்தை விலைக் கொடுத்து வாங்கிவிடலாம்
நவரத்தினங்களையும் விலைக் கொடுத்து வாங்கிவிடலாம்
விலைக் கொடுத்து வாங்கமுடியா பொருள் ஒன்று உண்டு என்றால்
அதுவே இரு நண்பர்களை பிணைக்கும் தூய நட்பு
நட்பிற்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே கொடுப்பதொன்றே
அன்பை,பணிவை,பரிவை இத்தனையேன் தன்னையே கொடுப்பதும்
நட்பு ஒன்றே, ஆதலினால்தான் நட்பு கொடுத்து நட்பைத்தான்
வாங்கிட முடியும் ; நட்பு விலைமதிக்க முடியா மாணிக்கம் .
கண்ணன்-குசேலன் நட்பே இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு
ஏழ்மையில் உழன்ற நண்பன் குசேலனுக்கு
இறையோன் கண்ணன் இப்பிடி அவலுண்டு குசேலன் துயர் போக்கினான்
மூன்றாம் பிடி அவல் உண்டு தன்னையே குசேலனுக்கு தந்திட முன்வர
அதனைத் தடுத்தி நிறுத்தினால் அங்கு இலக்குமியாம் ருக்குமிணி !
இது கடவுள் மனிதனாய்ப் பிறந்து நட்பின் உயர்வை வெளிப் படுத்தல் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jan-17, 4:18 pm)
Tanglish : natpu
பார்வை : 640

மேலே