சாயமேறிய உதடுகள்

தொடர் வண்டியின் நீளம் தோற்கும்
ஒரு நீண்ட பயணம்
பெரிதாய் ஒரு ஆசை நிறைவேறியது
ஆம் சன்னலோர இருக்கைதான்
கடப்பது யார்?
எனும் குழப்பத்தில் ஆழ்த்தும் மரங்கள்
தொடர் வண்டியை தொடர்ந்து வரும் நிலவு
இதமாய் இருக்கும் பனிக் காற்று
சன்னலை மூடுச் சொல்லும்
குளிர் தாங்காத இளைஞனின்
போர்வைக்குள் இருந்து எட்டிப் பார்க்கும்
குறுகுறு பார்வை

நீண்ட பயணம் என உறுதி செய்யும்
நிறைந்த தண்ணீர் குடுவை
காற்றுக்கு வீங்கும் தலையணை
விதவிதமான பூ போட்ட போர்வை
உருவத்தை வைத்து பார்த்தால்
இருவேளைக்காவது தாங்கும்
உணவுப் பொட்டலம்

எதிர் இருக்கைதான்
நிலவுக்காக நான் ஏங்குவதை
எப்படியோ அறிந்தவன்
அனுப்பி வைத்திருக்கிறான்
நவீனம் ஏறிய மேகம் போல்
புதுமையின் கை வரைந்து கிடந்த
சுருண்ட முடி
மின்விளக்கை பிரதிபலிக்கும்
சாயமேறிய உதடுகள்
வெந்ததா என அவித்த இட்டிலியை
யாரேனும் தொட்டு பார்க்கையில்
ஏற்பட்டிருக்கும் கன்னக்குழி

தணிக்கை குழுவிற்கு
வேலை தர விரும்பாத
என் பார்வையில் விழுந்தது அவ்வளவே
இருப்பினும்
இதை விட அவளழகை முழுதாய் சொல்ல
என்னை விட அதிகம் பார்த்திருக்கிறது
போர்வைக்குள் இருந்து
அந்த குளிர் தாங்காத
முகவரி தெரியாத
இளைஞனின் கண்கள் ;-) ;-) ;-)

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (17-Jan-17, 5:25 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 82

மேலே