முன்னேறு

தங்கமென நீ வானில் மின்னிட‌
தாலாட்டில் மகிழ்கின்ற குழந்தையாய் ஆகிட‌
தினமும் நம்பிக்கையை மட்டும் வணங்கிடு
தீதாய் பழகுவோரை விட்டு விலகிடு
துரத்து லட்சியத்தை தயங்கி நிற்காதே
தூரத்து நிலவொளியும் உனக்கு வழிகாட்டும்
தேயும் நிலாவும் பௌர்ணமியில் முழுதாகும்
தைக்கும் முட்களெல்லாம் மிதித்திடவே பழுதாகும்
தோல்வி ஓடிவிடும் வெற்றி தேடிவரும்

நல்லது நினைத்திருக்க பொல்லாங்கு வந்திடாது
நாளும் பொழுதுகளும் வலியெதுவும் தந்திடாது
நில்லாமல் உழைப்போருக்கு உதவும் இதயங்களும்
நீயும் முன்னேற வாழ்த்தும் கைதட்டும்
நுகர வருகின்ற இடஞ்சல்கள் பதறியோடும்
நூதனம் நீயென்றெண்ணி நாற்புறமும் சிதறியோடும்
நேரம் நல்லதாகும் வாழ்க்கை சொர்க்கமாகும்
நைதிகை மலருமுனக்கு மாலையாக பூத்துநிற்கும்
நோக்கம் சிறப்பென்றால் முன்னேற்றம் கைகொடுக்கும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Jan-17, 11:18 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : munneru
பார்வை : 387

மேலே