ஜல்லிக்கட்டு தடை

உடமையை பறித்தாய்
உரிமையை பறித்தாய்
கொட்ட குனியும்
கூட்டமனே நினைத்தாய்
எங்கும் தமிழனை வதைத்தாய்
தட்டி பறிக்க நினைத்தாய்
விட்டு பிடிக்க நினைத்தோம்

எட்டப்பர்களின் உதவியால்
எல்லை மீறினாய்
துரோகம் தூவினாய்
பொறுமை காத்தோம்
கோழை என்றே நினைத்தாய்
என்இன உணர்வை தொட்டாய்
தமிழ்இன உணர்வை தொட்டாய்
ஜல்லிகட்டை நிறுத்திவிட்டாய்
முடிவு காலம் உனக்காய்
காளைகளை அடக்க தெரிந்தவனுக்கு
கழுதையை விரட்ட தெரியாதா
உன்னை விரட்ட தெரியாதா

மனிதம் போற்றி நிற்கின்றோம்
அறவழியில் மொழிகின்றோம்
ஜல்லிக்கட்டு தடை உடைக்க
பொறுமை வெடித்து சிதறும்
முன் வழிவிடு
பண்பாட்டை வாழவிடு
தடையை நீக்கி
ஜல்லிக்கட்டு
தடையை நீக்கி

எழுதியவர் : ஜெகன் ரா தி (18-Jan-17, 12:54 pm)
Tanglish : jallikkattu thadai
பார்வை : 270

மேலே