அந்த கால கவிஞர்கள்

மாமன்னருக்கும் அன்று
நல்லதோர் ஆஸானாய்
நண்பனாய் ,தந்தைத் தாயாய்
துணை இருந்து
கண் இமைப்போல்
காத்து நின்றார்
பெரும் பெரும்
புலவர் பெருமக்கள்
இவர்கள் மன்னருடன்
போர்க்களம் செல்லக்கூட
அஞ்சியதில்லை ,ஆங்கு
தம் மன்னரை
நல்ல நல்ல கவிகள் கொண்டு
வெற்றிவாகைச் சூடிட
பக்க பலமாய் நின்றனரே

கம்பன், மஹாகவி, மாமேதை
கவி வடிவில் வால்மீகிக்கு ஒப்ப
தீந்தமிழில் ராம காவியம்
திரு அரங்கன் கோயிலில்
அந்த நரசிங்கமே ஆமோதிக்க
அவையோர் முன் பாடி அருளினான்
அந்த கம்பனுக்கு இளவயதில்
வாழ்வளித்தான் கடையநல்லூர்
வள்ளல் சடையன்
தன வாழ்நாள் முழுதும்
சடையனுக்கு புத்திரன் போல்
வாழ்ந்து காட்டினான்
கவிச் சக்ரவர்த்தி கம்பன்

கூலிக்கு கவி எழுதுவார் இல்லை
சங்கத் தமிழ் கவிஞர்கள்
உண்மைக்கு புறம்பாய்
எழுதி வாழாதார்
நெற்றிக்கண் திறந்தாலும்
குற்றம் குற்றமே என்று
அந்த முக்கணனிடமே

தயங்காமல் கூறினான்
முருகாற்றுப்படை கவி நக்கீரன்

என்றும் நிலைத்து வாழ
நெல்லிக்கனி ஒன்றை
வள்ளல் அதியமான் தனக்களிக்க
அதை மாமன்ன நீதான்
மக்களுக்காய் நீடு வாழ்தல் வேண்டும்
என்று அவனுக்கே அளித்த
தமிழ்பெரும் பெண் கவி
அவ்வை மூதாட்டி

மறந்தும் இறைவனைத் தவிர
வேறெவர்க்கும் இன்னா பாடாது
என்றார் அல்வார் பெருந்தகை
பிரபந்த மாமுனி நம்மாழவான்

அன்பும்,பண்பும்,அறிவும் ஒருங்கே
அமைந்த இப்புலவர் பெருமக்கள்
உலகின் உயர்வுக்கே வாழ்ந்த உயர்மக்கள்
பொய்யாமொழி பாவலர்கள்
இவர்கள் கூப்பிட இறைவன்
அடியார்ப் போல் வந்து ஆங்கு
இவர்களுக்கு காட்சி தந்தான்
இவர்களுடன் பேசி மகிழ்ந்தான்
உறவாடி மகிழ்ந்தான்


இப்புலவர் பெருமக்களை நினைத்து
இந்த சிறுபுலவன் நான் பெருமைப்படுகிறேன்
தெய்வப்புலவர் இவர்களுக்கு
என் மனமார்ந்த தண்டம் சமர்ப்பிக்கின்றேன்

இவர்கள் போல் புலவர்கள்
மீண்டும் மீண்டும் அவதரித்திடல் வேண்டும்
இறைவா இதுவே இன்றைய
என் வேண்டுதல்
நிறைவேற்றி வைப்பாயா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jan-17, 2:28 pm)
பார்வை : 63

மேலே