ஜல்லிக்கட்டு

என் இளங்குருதிகளே
உங்கள் வீரத்திற்கு இல்லை ஈடு !!!
நீங்கள் இரண்டாம் முறையாய்
இந்த தரணிக்கு நிரூபித்து விட்டீர்கள் !!!
தமிழனுக்கு ஓரு கஷ்டம் என்றாலும்
அவன் கலாச்சாரத்துக்கு தடை என்றாலும்
களத்தில் இறங்க தயங்கியது இடைப்பட்ட காலம் !!!
ஆனால் என் இளைஞன் இன்று
எதற்கும் தயங்க மாட்டான் !!!
அவனுக்கு இணையத்தை
கேளிக்கைக்கு கையாளவும் தெரியும் !!!
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு
தமிழ் இனத்தை திரட்டவும் தெரியும் !!!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !!!
இந்த வரிகளை ஏட்டில் படித்ததுண்டு !!!
உண்மையில் உணர்ந்தது நேற்றுதான் !!!
நெற்றியில் வெற்றித் திலகமிட்டு
போருக்குச் செல் என தாய்
அனுப்பியது சங்க காலம் !!!
தமிழர் பெருமையை நிலை நாட்ட
தானே முன் வந்து அற வழியில்
போராடியது எங்கள் இளங்கன்றுகள் !!!

எழுதியவர் : செல்வி (18-Jan-17, 2:35 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 131

மேலே