நகைச்சுவை- கவிதை

அட ராக்கப்பா கையைத்தட்டு
அந்த சின்னப்பாக்குக்கு கும்பிடு போடு
சின்னப்ப சின்னப்ப என்று கூவி அழைத்திடு
அவன் பார்க்கையில் தரையில் விழுந்து
சேவித்து எழுந்திரு
இதுவே வெற்றி கோட்டைக்கு உன்னை
இழுத்து செல்லும் நம்பிடு
கட்சியில் உனக்கு டிக்கெட்டும் நிச்சயம் நம்பிடு
ஒரு நாள் நீயும் பெருமானாய் வளர்ந்திடுவாய்
நம்பிடு ..........
ஜாங்கு சக்கு ஜனக்கு சக்கு
அட ராக்கப்பா கையைத் தட்டு
சின்னப்ப சின்னப்ப என்று கூவு
ஹய்......ஹய்......ஹய்.ஹய்

(இப்படியும் பாடி சிலர் முன்னுக்கு வரலாம்
இது என் கற்பனை இன்றைய சமுதாயம்
இப்படித்தான் பாடி ஆடுமோ யாரறிவார்
பராபரமே)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jan-17, 2:47 pm)
பார்வை : 520

மேலே