வீர தமிழன்

தண்பணை நாட்டிலே தினம்
தண்டுலம் விளைத்திட தினம்
தரளை உண்டு
தரிதம் இன்றி வளர்ந்த
தண்ணடை மக்களடா நாங்கள் !

எமக்கென ஒரு கோட்டையும்
எமக்கென ஒரு வாசலும்
எமக்கென ஒரு ஆட்சியும்
எமக்கென ஒரு சின்னமும் - கொண்டு
வாழ்ந்த மக்களடா நாங்கள் !

கஞ்சிகை படைகளும் கொண்டு
குஞ்சுரம் படைகளும் கொண்டு
கொஞ்சமும் பயம் இன்றி
எஞ்ஞான்றும் எங்கள் புகழ்
எஞ்சலிடாது போரிட்டு அதில்
எஞ்சிய வீர பெருமக்களை
தஞ்சம் என்று வந்தார்க்கும்
சஞ்சீவனம் அளித்தவர்களடா நாங்கள் !

ஆயிரம் படை எதிர்த்தாலும்
அயிராவதம் ஒன்றனை கொண்டு
ஓயித்து கட்டிய வீரவம்சமடா !
உயிர்புனல் எங்கும் பாரம்பரியத்தை
குயிலி நெஞ்சில் உரமிட்டு
எயிற்றம்பு புவியெங்கும் வீசி
தயித்தியரை அழித்த புலிவம்சமடா நாங்கள் !

அச்சுக்கட்டு கொண்ட நாட்டிலே
கச்சல் முதல் ஊட்டிய
அச்சம் தவிர்க்கும் பாரம்பரியத்தை
உச்சி மீது நின்று - நீ
கூச்சலிட்டு சொல்லி தடுத்தாலும்
துச்சமாய் எண்ணி நாங்கள்
வச்சிரமாய் போரிடுவோமடா !

போருக்கு புற முதுகிடாமல்
போரில் நெஞ்சை நிமிர்த்தும்
வீர தமிழரடா நாங்கள் !

எழுதியவர் : புகழ்விழி (19-Jan-17, 2:11 pm)
Tanglish : veera thamizhan
பார்வை : 879

மேலே