ஜல்லிக்கட்டு

ஜீன்ஸ் பேண்ட்
போட்டு சிலம்பாட்டம்;
சின்னத்திரை விட்டு
வெளியேறிய பெண்கூட்டம்;
கட்சிகள் நடத்தா
பொதுக்கூட்டம்;
இளைஞர்கள் மனதில்
வெறியாட்டம்;
ஒற்றுமை உண்டே
எங்கள் மனதில்;
வெற்றியை சுவைப்போம்
கூடிய விரைவில்;
தமிழ் பேசி
தமிழனாய் பேசி
தடையின்றி நடக்கும் போராட்டம்;
ஜல்லிக்கட்டே
எங்கள் உயிரோட்டம்!

எழுதியவர் : சங்கேஷ் (19-Jan-17, 8:07 pm)
சேர்த்தது : சங்கேஷ்
Tanglish : jallikkattu
பார்வை : 374

மேலே