படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

.நாட்டின் முதுகெலும்பு
முறிவது முறையோ
உழவன் தற்கொலை !

வெட்கப்படுங்கள்
தேசிய அவமானம்
உழவன் தற்கொலை !

பலர் பசி போக்கியவன்
தன் பசி போக்க வழியின்றி
உழவன் தற்கொலை !

அட்சயப்பாத்திரம்
திருவோடானது
உழவன் தற்கொலை !

நதிகள் இணைத்தால்
இருக்காது
உழவன் தற்கொலை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (19-Jan-17, 8:31 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 137

மேலே