காளைகளே பாருங்கள் ஜல்லிகட்டு காண வாருங்கள்

மாணவ காளைகளே
தமிழ் மானம் காக்க
மரபுகள் நிலைக்க
தமிழினமாய் உணர்வாய்
திரண்டாய்
காளைகளே கலங்காதே உனக்கான
குரல் ஒலித்து கொண்டுதான்  
இருக்கும் உன் வீரம் மீண்டும்
தமிழ் மண்ணில் பதியும்
நாள் வரும் வரை.....

பசி பாராமல்
உறக்கம் கேட்காமல்
குடும்பம் தனைபிரிந்து
தமிழ் மரபில் விளைந்த
ஜல்லிக்கட்டுக்கு
உன் உயிர் கொடுத்து
உயிர் தர துணிந்தாய்
மாணவ சமுதாயமே உனக்கு
ஒவ்வொரு தமிழனும் தோள்
கொடுப்பான்....

நம் உணர்வுக்கு தடை சட்டம
வேடிக்கை பார்க்கும் அரசு
தமிழனின் தெய்வமாக வீற்றிருக்கும்
நந்தி காளையின் புகழ் சொல்லும்
தமிழன் பாசமாக காளை வளர்க்க
தமிழன் வீரமாகஜல்லிக்கட்டு...

பாரினில் தமிழன் எங்கு பரவி இருந்தாலும்
உணர்வில் ஓன்றான வரலாறு பார்த்தது அகிலம் வியந்ததென்ன
நாம் வளர்த்த காளைகள்
கண்டு பாசம்கொண்டதென்ன
சுற்றிதிரிந்த காளைகள் நம்மை
வீரம் கொள்ள செய்த வினை என்ன..

கண்ணீர் கொண்டு தடை உடைக்க
வேண்டினேன்
நம்காளைகள் சீறிபாய்ந்து மரபு
காக்க ஓடுமா
வீரம் தந்த காளையே உன் வம்சம்
காக்க ஓடிவா..

ஏறுதழுவுதல் வேண்டுமே
ஏமாற்றம் இனியும் வேண்டாமே..
உணர்வுக்கான வேண்டுமே
உரிமைக்குரலின் போராட்டம்
வெற்றி பெற வேண்டுமே
மாணவசமுதாயம் மரபு
காக்க வழி விடு
காளைகள் வீரம் பேச
விளையாட விடை கொடு
மாணவ சமுதாயம் தனை
மதித்திடு
ஜல்லலிகட்டின் தடைகளை தகர்த்திடு....

எழுதியவர் : சிவசக்தி (20-Jan-17, 8:27 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 645

மேலே