காதல் இராகம்

நாதமிழந்த வீணையதை நான் மீட்டுகிறேன்...
நானடைந்த சோகந்தனை அதில் கூட்டுகிறேன்...
நாணலென நாளும் தேகம் மெலிகிறேன்...
நாயகன் நினைவில் உயிர் வாடுகிறேன்......

மேகம் குளிர்ந்தும் மேனி அனலாய்
தாகம் தணிந்தும் நாவில் வறட்சியாய்
பூக்கள் மலர்ந்தும் பூமியில் சருகாய்
பூமுகம் சிரித்தாலும் பூகம்பம் உள்நடக்குதே......

உளிகள் சத்தம் நெஞ்சில் விழுகின்றது
கிளிகளின் சத்தம் முட்களாய்த் தைக்கின்றது
உள்ளத்தின் சத்தம் உணர்வில் கலக்கின்றது
உரக்கச் சொல்ல மௌனம் தடுக்கின்றது......

புலியின் நகங்கள் பூவிதழையும் கீறுதே
வலியில் நெஞ்சம் உதிரம் வடிக்கிறேன்
மன்னவன் மொழிகள் செவிகள் கேளாது
மண்ணின் வேர்களாய் நானும் மறைகிறேன்......

இதயத்தின் ரணங்களை இன்னிசையில் பாடிட
தேகத்தின் நரம்புகளை வீணையில் கட்டி
தேன்துளிகளை தென்றலில் சேர்த்து மீட்டிட
சுருதி என்விரல்களில் சுகமாய் பேசட்டும்...

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 12:01 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 311

மேலே