கண்ணீர்ப் பூக்கள்

நிலவென்று
உனை அழைத்ததால்
தொலைதூரத்தில் நீ...
பூமியில்...
பார்க்கும் விழியாய் இவன்......

மலரென்று
உனைத் தாங்குவதால்
புன்னகை செய்கிறாய் நீ...
மண்ணில்...
புதையும் வேராய் இவன்......

மன்னனென்று
உனைச் சொன்னதால்
மக்களோடு இருக்கின்றாய் நீ...
தோட்டத்தில்...
தனிமையில் பூக்கிறாள் இவள்......

கண்ணனென்று
உனைப் பூசித்ததால்
மாயங்கள் செய்கிறாய் நீ...
மனதில்...
காயம் படுகிறாள் இவள்......

காதலெனும்
உறவில் இணைந்த பறவைகள்
அன்பால் அகத்தைப் பகிர்ந்தது...
ஆகாயத்தில்...
சிறகு விரித்து பறந்தது......

வேடரெனும்
கௌரவம் பார்க்கும் கூட்டம்
அம்புகள் எய்து துளைத்தது...
இதயங்கள்...
குருதியில் நனைந்தே பிரிந்தது......

பிரிவெனும்
தீயில் வெந்த மனங்கள்
மரணத்தின் விளிம்பில் நின்றது...
காதல் வானவில்...
தரையில் வீழ்ந்து நொறுங்கியது......

மொழிகள்
மௌனமாய் இன்று இருக்கின்றது...
விழிகள்...
மீன்களாய் கண்ணீரில் நீந்துகின்றது...
ஈருயிர்கள்...
வாழ்வதாலே இங்கு சாகின்றது......

தேன் சிந்தும் பூக்கள்
கண்ணீரில்...
கரைகின்றது மனம்
கருகும் மலர்களைப் பார்த்தே...
செந்நீரில்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 12:33 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : kanneerp pookal
பார்வை : 693

மேலே