ஏறு தழுவுக

ஏறு தழுவுக

ஏறு தழுவுக இளைஞனே இது
சீரிய பண்பாட்டின் உச்சம் இதில்
மாறுபடும் வீணர்களை
வீறுகொண்டு எதிர்கொள் தோழனே

மங்கையை மணப்பதற்கும்
மாநிலம் ஆளும் தலைமை பெறுவதற்கும்
எங்கள் முன்னோர் கண்ட நல்வழி இதனை
எதிர்ப்போர் மிரண்டோட
எழுந்து வா என் தோழனே

திங்களும் செங்கதிரும் தோன்றிய நாள் முதல்
வங்கக்கடல் நீர் வற்றி காயும் வரை
வெல்லும் திரள் தோள் கொண்டோய்
துள்ளி வா என் தோழனே
பேதைகள் தெறித்தோடசெய்வோம்

உழவர்களின் மேன்மையை
உலகோர்க்கு உணர்த்தும்
பழந்தமிழ் பண்பாட்டின் நன்னாளாம்
பொங்கல் திருநாளை
எங்கணும், யாவரும் உணர கொண்டாடுவோம்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் கவிதையாள (20-Jan-17, 7:33 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 718

மேலே