ஜல்லிக்கட்டுப் போராட்டம்

ஜல்லிக்கட்டு
இது நம் தமிழ்
பாரம்பரியத்தின்
பாரம் மிகுந்த விளையாட்டல்ல
வீரம் மிகுந்த விளையாட்டு
தமிழ்ச் சாரம் நிறைந்த விளையாட்டு
இன்றோ
ஓரம் நிற்கும் விளையாட்டு

பீட்டா அமைப்பே
ஜல்லிக்கட்டை முடித்தாய் நீட்டா
மக்களே பீட்டா அலுவலகத்தில்
பூட்டுவோம் பெரிய பூட்டா
பீட்டாவை விரட்டியடித்து விரைவில்
காட்டுவோம் டாட்டா

தமிழன் காலையில்
விளையாடுவதைவிட
காளையோடு விளையாடவே விரும்புபவன்

காளைகளுக்காக
இன்று
தமிழ்க் கன்னியர்களெல்லாம்
போராட்டக்களத்தில்
காளைகளாய்

ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூரின்
அலங்காரம்
இன்று
அலைகளுக்குப் பக்கமாய்
மெரினாவில் ஒரு தூங்காநகரம்

தமிழர்கள்
நாங்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல
திமிலைப் பிடிப்பவர்கள்
இன்று எங்கள் ஒற்றுமையால்
திமிங்கலத்தைக்கூடப் பிடிப்போம்

தமிழ் மாணவர்கள்
தைரியமானவர்கள்
தமிழ் மாணவர்கள்
மான் அவர்கள்
கோமான் அவர்கள்
சீமான் அவர்கள்
புலிக்குப் பாய்ந்தோடும்
மான்கள் அல்ல அவர்கள்
புரட்சிப் புயலுக்குப் பிறந்த
வீரமானவர்கள் தீரமானவர்கள்

மஞ்சுவிரட்டு
பயத்தை தமிழர்தம்
நெஞ்சிலிருந்து விரட்ட

ஏறுதழுவுதல்
இது காளைகளோடு
விளையாடும் ஒரு
அற்புத வீரக்கலை
இதற்கு ஏன் நீதியே
தடை ?
எதிர்த்துக் கிளம்பிவிட்டது
தமிழகத்துப் படை

நீதியே
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் ஜோதியே
அணைக்காவிடினும் ஆணையிட்டு
அணைக்கவேண்டாம்
வேரேற்றி நினைக்கவேண்டாம்
தயவுசெய்து
நீரூற்றி நனைக்கவேண்டாம்

புழுதிகள் நிறையவேண்டும்
ஜல்லிக்கட்டுத் தடத்தில்
பிறகுதான் கைவைப்போம்
பாடத்தில்
இப்படிக்கு மாணவர்கள்

எழுதியவர் : Kumar (20-Jan-17, 8:44 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 1164

மேலே