இவன்தானா என்னவன்

நேற்றுவரை அவன்தான்
என் உயிரென்று நீ இருந்தாய்
நான் அறிவேனடி தோழி

இன்றோ நீ அவன்
சட்டை மாற்றும் அரவம்
என்றறிந்தேனடி தோழி
இதோ இப்போதே
அவனை என் மனதிலிருந்து
அறுத்து இருந்துவிட்டேன்
என்று கூறுகிறாய்
ஏன் என்று நான் அறியலாமோ
சொல்லேன் ஏன் தலைவி

உன்னிடம் சொல்ல
எனக்கேன் தயக்கமடி
என் ஆருயிர்த் தோழி
இதோ சொல்லுகிறேன்
கேட்டிடுவாய் நீயே

வீட்டிற்கு வந்த
என் அத்தையை
அவள் சொந்த ஊர் செல்ல
கொண்டுவிட
பேரூந்து நிலையம் சென்றேன்
அங்கு தானடி
என் நாவும் சொல்ல கூசும்
அந்த காட்சி கண்டேன்
என்னவன் இவனே
என்று இதனை நாள்
கனவு கண்ட நான்
அந்த "என்னவன்"
மற்றோர் பெண்ணை
கையால் அணைத்து
அடிமேல் அடிவைத்து
அவள் காதில்
காதல் மொழி பேசி
அந்த பேரூந்து ஒன்றில்
எங்கோ செல்ல எரிகொண்டானடி


அந்த ஆண்டவன்
என் பக்கம் இருக்கின்றான்
என்று நினைகின்றேனடி தோழி
என்னவன் என்று
இதனை நாள் நினைத்த
அந்த தீயவன்
பெண்மையை சூறையாடவந்த
ஒரு நச்சு பாம்பென்று
என் தோழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jan-17, 9:36 pm)
பார்வை : 133

மேலே