உண்மைக் காதல்

ஒரு பெண்ணின் மீது
தாவணி கட்டும் காலத்தில்
ஒரு ஆணுக்கு
ஏற்பட்ட காதல் --- ---

அவள் அவனுக்கு
இல்லாள் ஆனபின்
பாரம்பரிய புடவை கட்டும்போதும்,
நாகரீக சுடிதார் அணியும்போதும்
செல்லமாய் முறைக்கும்போதும்
கோபமாயே முறைக்கும்போதும்
மௌன மொழி பேசும்போதும்
மடை திறந்து பேசும்போதும்
தாளங்கள் சேர்ந்தொலிக்க
ராகங்கள் பாடும்போதும்
இயற்கை அழகானாலும்
ஒப்பனை அழகானாலும்
விரையும் வயதுடன்
மறையும் அழகானாலும் --- --- y

மாறாத காதலாக
சீராக வாழ்ந்து வந்தால் ----

மெய்யான காதல் என்பது
அதுதானே! அதுதானே!

ஆக --
காதல் என்பது
கண்டதும் வருவதல்ல!
கண நேர நிகழ்வுமல்ல!
ஒரு வாழ்க்கை காவியம்!
அழியாத ஓவியம்!
அது
வெறும் உணர்ச்சி அல்ல!
பெரும் வளர்ச்சி!
உடல் முதுமையால்
மங்குவதல்ல!
மன முதிர்ச்சியால்
தங்குவது!
மெய்க்காதல் வாழ்க!
மெய்க்காதல் வாழ்க!
மெய் மோகம் இல்லா
மெய்க்காதல் வாழ்க!

எழுதியவர் : ம. கைலாஸ் (20-Jan-17, 11:12 pm)
சேர்த்தது : M Kailas
Tanglish : unmaik kaadhal
பார்வை : 367

மேலே