ஊனமில்லா உறவோடு

இரவின் ரீங்காரம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. சமயலறையில் உருண்ட பாத்திரம் எதிலோ மோதி நின்றது. மஸீஹா நேரத்தை பார்த்தாள், அதிகாலை 3 மணி. பூனையின் திருட்டு வேலை என்று எண்ணி மறுபக்கம் திரும்பி படுத்தாள். தாயாரை காணவில்லை.பதட்டம் மனதை தொற்றியது. அன்று சனிக்கிழமை என்ற ஞாபாகம் வந்ததும் சமயலறையின் ரகசியம் புரிந்தது. அன்று தான் மஸீஹாவை பெண்பார்க்க மாத்தளை வரகமுறையிலிருந்து யாரோ வருவதாக தரகர் மாமா கூறியிருந்தார். மஸீஹாவின் 5வது தங்கையும் சென்ற மாதம் பருவமெய்ந்திருந்தாள். தந்தை இல்லா குடும்பத்தில் 5 பெண் பிள்ளைகளையும் வளர்க்க இல்முன்னிசா பட்ட பாடு தரகர் மாமாவுக்கு தெரியும். தரகர் மாமா தந்தை வழியில் எப்படியோபெரியப்பா உறவு. வயதான மனிதர் என்றாலும் கண்ணியமானவர். மஸீஹாவுக்கு எப்படியாவது நல்ல வரன் கிடைக்க வேண்டும் என பல வாசல் படி ஏறியவர். மஸீஹாவும் சென்ற மாதம் வரை சலிக்காமல் 18 மாப்பிள்ளைமாருக்கு பொம்மை தரிசனம் கொடுத்தவள் தான். கடைசியாக வந்த வத்தேகம மாப்பிள்ளை தாயாரின் கை வண்ணத்தில் மின்னிய அல்வாவை மென்று கொண்டே " ம்ம் பெண்ணின் உயரம் ஒரு அங்குலம் குறைவாக இருந்தால் பொருத்தமாய் இருந்திருப்பாள் என்றதும் மஸீஹாவுக்கு பொத்தி கொண்டு வந்தது மஸீஹாவுக்கு மட்டும் அல்ல தரகர் மாமாவுக்கும் தான். " என்ன மாப்பிள்ளை பொண்ணுட உயரத்தை வெட்டியா குறைக்க ஏழும்? அவ சராசரி உயரம் தான், என்று கட்டை மாப்பிள்ளைக்கு பட்டும் படாமலும் ஒரு குட்டு வைத்தார். ம்ம் அந்த சம்பந்தமும் அவ்வளவு தான். பாவம் உம்மா 5 நாட்கள் பிழிந்த இடியாப்ப சல்லி இனிப்பாக மாறி மாப்பிளை கூட்டம் விருந்துண்டு சென்று விட்டது.
இன்று வரப்போகும் அக்குறணை மாப்பிள்ளை வீட்டாரை பற்றி தரகர் மாமா பலமுறை சொல்லி இருந்தார். " நல்ல குடும்பம். பொடியானும் தங்கம். ஆனா அந்த ஊர் வழக்கப்படி ரூம்செட் கொடுக்க வேணும். சொந்த பிசினஸ் செய்ற பொடியன். மஸீஹாவுக்கும் 28 வயது முடியப்போகுது. இப்ப 18 வயது பொண்ணுகளுக்கே வரன் தேடுறது கஷ்டம். 5 பெண் பிள்ளைகளை பாரமா கருதம ஏத்துக்குற பொடியன். சல்லி கிள்ளி கேட்ட கூட எண்ணமாலும் செஞ்சி சமாளிக்க பாரு தங்கச்சி. நானும் ஏதாவது செய்ய பாக்குறேன் என்று நெற்றியை தடவி கொண்டார் தரகர் மாமா. மாப்பிள்ளை தங்கம் என்றதும் இந்த வரனை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று ஒருவாரமாக இல்முன்னிசா சிந்தித்து கொண்டிருந்தாள்.
மீண்டும் தாயாரின் இடியாப்ப வருமானம் இனிப்பாக மாறுவதை எண்ணி கலங்கியவள் தன்னால் முடிந்த கை உதவியை செய்ய சமயலறைக்குள் புகுந்ததாள். தாயாரின் கை வண்ணமும் தமக்கைகளின் அழகு திறனும் என சாப்பாட்டு மேசைக்கும் மஸீஹாவுக்கும் அழகு கூடியிருந்தது. 10 மணிக்கு வரவேண்டியவர்கள் 11 மணிக்கு வந்து சேர்ந்தனர். தங்கை மார்கள் பக்கத்து வீட்டு சுலைஹா மாமியின் வீட்டில் குடுயேறி இருந்தனர்.எத்தனையோ மாப்பிள்ளை மார்கள் பெண்ணை பார்ப்பதை விட இரண்டாவது மூன்றாவது தங்கை மாரை கூர்ந்து பார்ப்பதை அறிந்து தரகர் மாமா தான் இந்த ஏற்பாட்டை செய்ந்திருந்தார்.
பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. மஸீஹாவின் ஆடை அணிகலனில் இருந்து கால்விரல் வரை பரிசோதிக்கப்பட்டு மணமகனின் விருப்பமும் தெரிவிக்கப்பட்டது. மஸீஹா மெதுவாக தன் வருங்கால கணவனை ஏறிட்டாள். முக அழகை விட அக அழகை ஆராய்ந்தாள். கண்டு பிடிக்க முடியவில்லை. மணமகனின் சகோதரிகள் பட்டும் படாமலும் சீதனம் என்ற ஏலத்தை தொடங்கினார்கள். மஸீஹாவுக்கு உள்ளம் பதற தொடங்கியது. எவ்வளவு தான் பெண் உரிமைக்கு பெண்கள் குரல் கொடுத்தாலும் ஒரு பெண்ணின் அழிவுக்கு முக்கிய கரணம் பெண்ணே தான். அதிலும் திருமண விடயத்தில் பெண்ணை முதிர் கன்னியாக்குபவள் நிச்சயம் ஒரு பெண்தான் என எண்ணியவள் மனக்கலவரத்துடன் நடப்பதை கவனித்தாள். " எங்கட ஊர் வழக்கம் தெரியும் தானே அழகான ரூம்செட் ஒண்டு வேணும் அதுவம் தேக்கு மரத்துல செஞ்சா மிச்ச நல்லம்.எங்களுக்கு பாவிக்கவா கேக்குறம் உங்கட மகளுக்கு தானே. மத்தது தம்பிட பிசினஸ் இப்ப கொஞ்சம் டல் அதனால ஒரு லட்சம் ரொக்கம் தந்தால் போதும் வேற எதுவும் தேவல்ல என்றாள். தாயாரும் கேட்பதை தருவதாக வாக்களித்ததும் மஸீஹாவுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. ரூம்செட் அதுவும் தேக்கு கொறஞ்சது ஒன்னரை லட்சம் போகும், ரொக்க பணம், நகை நட்டு என்று பார்த்தாள் திருமண செலவு 6 ,7 லட்சம் தேவைப்படும். தாயார் அறிந்த கூறுகிறாள் என்று தாயாரின் முகத்தை பார்த்தவளுக்கு அமைதியான முகத்தில் ஒன்றுமே அறிய முடியவில்லை.
திருமணம் டிசம்பர் மாதம் என்று முடிவானது. இருப்பது 03 மாதம். மஸீஹா எதுவும் புரியாமல் மௌனியானாள். இதற்கிடையில் தாயார் பலமுறை சுலைஹா மாமியின் துணைக்கு வைத்திய சாலைக்கு சென்று வந்தாள். பாவம் சுலைஹா மாமி தலை மேல் பணம் இருந்தும் பழுதடைந்த இரு சிறுநீரகத்தை மாற்று சிகிச்சை செய்ய அவதி படுகிறாள். இல்முன்னிசா தான் சுலைஹா மாமியின் துணைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறாள்.
நாட்களும் உருண்டோடியது. திருமணத்திற்கு ஒரு மாத கால அவகாசமே இருந்தது. இதற்குள் இல்முனிஷாவிடம் பல மாற்றங்கள். மகள்மாருக்கு தெரியாமல் அலுமாரியில் ஏதோ மறைப்பதும் அலுமாரி சாவியை தானே எடுத்து செல்வதுமாக புரியாத புதிரானாள்.
திடீரென்று ஒரு நாள் வயிற்று வலியால் அவதிப்பட்ட இல்முன்னிசா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற போது தான் இல்முன்னிசாவிற்கு " அப்பெண்டிக்ஸ் " இருப்பதாக கூறி சத்திர சிகிச்சைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. `
மனக்கலவரத்துடன் 05 பெண்களும் என்ன செய்வது என்பதறியாது கலங்கினர். அதிஷ்டவசமாக மஸீஹாவின் கைக்கு தாயாரின் அலுமாரி சாவி கிடைத்தது. என்ன தான் உம்மா மறைத்து வைத்துள்ளார் என பார்க்க அலுமாரியை திறந்தவள் வாயடைத்து போனாள். ரொக்கம் ரொக்கமாக பணமும் பணத்தின் கீழ் ஒரு பைலும் இருந்தது. பைலை திறந்தவளுக்கு ஒரு நிமிடம் காலிற்கு கீழ் பூமி சுழல்வது போல் இருந்தது. தனது தாய் தனக்காக தன் சிறு நீரகத்தையே அர்ப்பணிக்க தீர்மானித்து விட்டாள். இத்தனை வருடமாக உதிரத்தை வியர்வையாக்கியவல் இன்று உறுப்பையே தானம் செய்ய துணிந்து விட்டாள். மஸீஹா சிந்தித்தால் தங்கை மாரிடமும் எதுவும் கூறாமல் தனித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் என்பதை உணர்ந்து தன் அறைக்குள் சென்று கதவை தாளிட்டாள். சுன்னத் தொழுகையை தொழுதாள். தெளிவுற்ற மனதுடன் உறங்கினாள்.
அடுத்த நாள் அதிகாலை நேரம்.வைத்தியசாலையே மக்கள் கூட்டத்தால் அலை முடியாது. நோயாளிகளை பார்க்கும் நேரம் கரு நீல சல்வாரில் மஸீஹா அழகாக வந்திருந்தால். அன்று தான் தாயின் அப்பெண்டிஸ் நாடகம் அரங்கேற இருந்தது.
தாயின் கைகளை ஆதரவாக பற்றியவள் கண்ணீர் மல்க " ஏன் உம்மா இப்படி ஒரு காரியம் செய்ய முடிவெடுத்தீங்க? என் கல்யாணம் உங்கள விட முக்கியமா? மகளின் அதிரடி கேள்வியால் நிலை குலைந்த இல்முன்னிசா மகள்? உங்களுக்கு எப்படி? யார் என தடுமாறினாள். உம்மா எதுவும் பேச வானம் என்ன மன்னிச்சுருங்க? உங்கள்ட கேக்காம இண்டகி தான் சுயமா தனி முடிவொன்று எடுத்திருக்கிறேன். ஆனால் உங்கட அனுமதியோட தான் இதுவும் நடக்கும். புதிர் போடும் மகளை ஏறிட்டாள் தாய் . மகளின் பார்வை திரைசீலையை ஏறிட்டது. தரகர் மாமா அருகில் கூனிய காலுடன் கை தடியின் தாங்களுடன் நின்று கொண்டிருந்தான் சுஹைல். நாட்டிற்காக போராடிய வீரன். இல்முன்னிசா புரியாமல் விழித்தாள்.
உம்மா! சீதனம் என்ற பேர்ல மனசுல ஊனமானவங்கள விட சொந்த நாட்டுக்காக போராடி தன் கால்களை பறிகொடுத்த சுஹைல் தான் என் வரும் கால கணவன். பள்ளி நாட்கள்ல என்னிடம் விருப்பம் கேட்டவர் தான் ஆனால் என் குடும்ப நிலைய சொல்லி நான் தான் மறுத்தேன். இன்று ஏலத்துல விடப்பட்ட முதுகெலும்பில்லா ஆண்களை விட உடல்ல ஊணம் இருந்தாலும் மனதளவுல மாசு இல்லா சுஹைல் தான் எனக்கும் எங்கட குடுபத்துக்கும் பொருத்தமான வரன்.. தரகர் மாமா சுஹைலின் தோள்களை பற்றினார். இல்முன்னிசாவின் கண்கள் குளமென நிறைந்தது... அது சோக கண்ணீரல்ல ஆனந்த கண்ணீர்.

எழுதியவர் : மாஹிரா (21-Jan-17, 9:57 am)
பார்வை : 647

மேலே