போராட்டம்

ஜல்லிக்கட்டு காளைகள்
துல்லிக்கட்டும் வேளைகள்
என்று வருமோ? - பலரை
வென்று வருமோ? - இது
பாட்டாவின் பாரம்பரியம்
பீட்டாவால் என்ன முடியும்?
பீடாவைப் போல்
மென்று துப்பி எறிவோம்!
அந்நியனின் சதியும்
அரசியல்வாதிகளின் கதியும் - நம்மை
ஆட்டுவிக்கின்றன!
தமிழுக்கு மட்டுமல்ல
இந்தியாவுக்கே விட்ட சவால்!
ஜனங்களை பிணியாக்கி
பணங்களை பறிப்பதற்கு
பிணங்களை பெருக்கம் செய்கிறான்!
நாட்டு இனங்களை அழித்துவிட்டால்
நாட்டையே அழித்து விடலாம்! - இதுதான்
அந்நிய சக்த்தியின்
ஆதிக்க மந்திரம்!
நாட்டு மாடுகளின்
சாணம்
மானம் காத்தன!
கோமியம்
காவியம் படைத்தன!
பால்
படை காத்தன!
தோல்
உடை காத்தன!
மாதாவே
கோமாதாவே
வணங்கியதையும்
இணங்கியதையும்
இயற்க்கை அறிந்தன!
ஆறு மந்திரத்தை கற்று
சோறு படைத்தால் - நாம்
வீறு படைத்து எழுந்திடலாம்!
ஒன்று
வெள்ளை ஜீனியில்
தொல்லை அதிகம்!
இரண்டு
மைதா மாவில்
மரணம் அதிகம்!
மூன்று
டால்டா உயிருக்கு டாட்டா
நான்கு
பொட்டல எண்ணெய்(ரீபைண்ட் ஆயில் ) - சீக்கிரமே
போய்சேரலாம் மண்ணை!
ஐந்து
அயோடின் உப்பு
அளவோடு தின்றாலும் தப்பு!
ஆறு
அஜினோமோட்டோ
ஆயுளுக்கு நோட்டோ! - ஆம்
விஷத்தை விரட்டியடிப்போம்!
வேளாண்மையை திரட்டியெடுப்போம்!
பாரம்பரியத்தை பாதுகாப்போம்!
பாமரனை வாழவைப்போம்!
இதுவெல்லாம்
மூடி வைத்த
மந்திரம் அல்ல!
மோடி வைத்த மந்திரம்!
பாடிக்கு தெரியாவிட்டாலும் - அவர்
தாடிக்கு தெரியும்!
மாறாட்டம் இல்லாத
போராட்டம்!
மாணவர்களுக்கு என்
பாராட்டும்!
தொடரட்டும் இந்த
சீராட்டம் !
வெல்லட்டும் இந்த
வீராட்டம்!

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (21-Jan-17, 11:39 am)
பார்வை : 180

மேலே