படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஆயிரம் தடைகள் வந்தாலும்
தவிடு போடி ஆனது
காளைகள் காளைகளால் வென்றன !

பீட்டாவால் வந்தது
குளிர்பானங்களுக்கு
ஆப்பு !


இனி அடிவிழும்
ஆற்றில் கை வைத்தால்
குளிர்பான நிறுவனத்திற்கு !

கிணறு வெட்ட
பூதம் கிளம்பியது
கோவிந்தா குளிர்பானத்திற்கு !


தமிழனைச் சீண்டினால்
தவிடு பொடியாவாய்
எச்சரிக்கை உலகிற்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (21-Jan-17, 8:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 85

மேலே