ஏழைஜாதி

எங்களுக்கு உயிர்தந்த
இறைவா ஏன்
வயிற் தந்தாய்
பசி அதை தினமும்
கிள்ளிப்பாக்குது...

மழை வேண்டும்
இவ்வையகத்தில்
சில நேரங்களில்
மழை வேண்டாம்
என வேண்டும்
ஜீவன்கள் நாங்கள்
படுக்க இடமின்றி
தவிக்கும் எங்களின்
சிறார்களை பாதுகாக்க...

வாரத்தில் ஒருநாள்
விடுமுறை
என்கிறார்கள்
சில நாட்களில்
எங்களின் வயிற்றுக்கு
தொடர்ந்து விடுமுறை...

இறைவா...
குழந்தை வரம் வேண்டி எத்தைனையோ
தம்பதிகள் தவமிருக்க...
அவர்களுக்கு மறுத்து
எங்களுக்கு கொடுத்து
தவிக்க வைக்கிறாயே
இதுதான் உன்
படைப்பின் நியதியோ...

எதிர்காலம் என்பது
எங்களுக்கு
புதிர்காலமானது
உதிர்காலம் ஒன்றை
உண்டாக்கி
எங்களின் வாழ்நாளை
குறைத்துவிடு இறைவா
துன்பத்தை
தாங்கமுடியவில்லை...

எங்களுக்கு ஒரு
சின்ன நிம்மதி
உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
உறங்க இடமின்றி
தவித்தாலும்
மானமின்றி
வாழ்வதேயில்லை நாங்கள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (22-Jan-17, 4:20 am)
பார்வை : 157

மேலே