நெருப்படா

தமிழ் எமது மூச்சு
தாகம் எமது பேச்சு
வேகம் எமது வீச்சு

எங்கும்தமிழன் வசம்
எளிமை அவன் வேஷம்
ஏறு கொண்டவன் வாசம்

பொய்யாத் தமிழன் உலகம்
மெய்யெ அவனது திலகம்
நில்லா அவன் முன் கலகம்

பாய்வது அவனும் அல்ல
பதுங்குவது அவனும் அல்ல
வீழ்வது அவனும் அல்ல

நெருங்குவது அவனிடத்தில் நீயாக
பொசுங்குவது அவனிடத்தில் நீயாக
நெருப்படா அவன் நெருப்படா

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Jan-17, 1:21 pm)
பார்வை : 268

மேலே