என்னதான்யா செய்யட்டும் நாங்க

கொஞ்சம் படிங்க,

பெண்களுக்கு எந்த தொல்லையும் இல்லை
சகோதரத்துவம் நிறைந்தே இருக்கிறது
களவோ புரட்டோ நடைபெறவில்லை
அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்
பொது மக்களுக்கு இடையூறு இல்லை
டிராபிக் முதல் கொண்டு இளைஞர்கள் செய்கிறார்கள்
உணவுக்கோ நீருக்கோ பிரச்சினை இல்லை
அனைத்தையும் தேடி வந்து தருகிறார்கள்
குப்பைகளால் அசுத்தம் இல்லை
அவர்களே சுத்தம் செய்து விடுகிறார்கள்
இன்னும் எத்தனை எத்தனை
நல்ல விஷயங்கள் இருக்கிறது....

நான் அங்கிருந்த போது
கெட்ட வார்த்தை பேசியவரை கூட
சகோ அதலாம் வேண்டாம்னு சொன்ன
எத்தனையோ பேர் இருந்தனர்
நியாயமான முறையில் இப்பவும் போகிறார்கள்

நீங்கள் தானே விடிவே வராதா என சொன்னவர்கள்
நீங்கள் தானே புலம்பி புலம்பி செத்தவர்கள்
நீங்கள் தானே மாற்றமே வராதா என ஏங்கியவர்கள்
நீங்கள் தானே கொடுமைகள் தீராதா என நொந்தவர்கள்

மனசாட்சியை தொட்டு சொல்லுங்க
இப்படி ஒரு விஷயத்தை நீங்கள் செய்திருக்க முடியுமா

ஏன்யா ஏன் ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசறீங்க
கெட்ட வார்த்தை பேசறாங்க
மோடியை அவமதிக்கறாங்க
முதல்வரை தரக்குறைவாக பேசறாங்க
இதலாம் அறப்போரட்டமா
இதுக்கு காஷ்மீர் தீவிரவாதிகள் பரவாயில்லை

சே சேர்ந்து நிக்கவும் முடியாது
சேர்ந்தவன நிக்கவும் விட முடியாது
நீங்களாம் ஒரு ஆளுங்க
முடியலனா விடுங்கயா ஆனால்
தப்பா பேசிக்கிட்டு இருக்காதீர்கள்

சத்தியமா வலிக்குதுயா
பல இரவுகள் தூங்காம
கஷ்டப்பட்டு இருக்கோம், இருப்போம்....

யோவ் ஆமாயா பல பேருக்கு சல்லிக்கட்டோடு வரலாறு தெரியாது
அது எப்படி அடக்கனுனு தெரியாது
மாடு பிடிக்கவோ வளர்க்கவோ தெரியாது
ஆனால் ஒன்னு தெரியும்
தமிழன்னு சொல்லி கூப்பிட்டா வந்து நிக்க தெரியும்
டே நான் நின்னன் நிக்கறன் நிப்பன்டா
ஏனா எனக்கு வரலாறு வேணா
தமிழன் கூப்பிடுறான் வந்திருக்கேன்

யாருய்யா நீங்களாம்
அங்க அங்க நடக்குற சில குறைகளை மட்டும்
பார்த்து பெரிசா பேசறீங்க
உனக்கும் சேர்த்து தான வந்தோம்
உன் குடும்பத்துக்காகவும் தான நிக்குறோம்

அவ்வளவு ஞானியா இருந்தா வா வந்து
இளைஞர்களே நாம் இப்படி போகிறோம் இதை விட இப்படி போகலாம் இதை செய்யலாம்னு வந்து வழிநடத்து வா யார் வேணானு சொன்னது

நியாயமான விசயம்னா நிச்சயம் கேட்க தயாரா இருக்கோம்... அதைவிட்டுவிட்டு இது நொன்ன அது நொன்ன....

ஆரம்பிக்கும் போது எங்க போனீங்க.... உங்களோட கருத்து சுதந்திரத்தை நான் குறை சொல்லல
பின்னாடி இருந்து வேண்டாம் முன்னாடி வந்து எங்க கிட்ட சபைல சொல்லுங்க என்ன செய்யலாம் எப்படி செய்யலாம்னு...... வரவேற்கிறேன்

குற்றம் குறை இருந்தா வந்து திருத்துங்கயா
குத்தி கிழிக்காதீங்க
இரத்தம் தமிழனோடது தான்...

தலைமை இருக்கா நோக்கம் இருக்கானு கேட்கிறீர்கள் சரி வாங்க வந்து தலைமையேற்று வழிநடத்தி நோக்கத்தை நிறைவடைய செய்ங்க....

ஒருத்தன் என்னடானா இவங்க ஜல்லிக்கட்டுக்காக மட்டும் போராடுறாங்கனு கத்துறான்
லைக் போடுறீங்க
இன்னொருத்தன் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் தான் ஆரம்பிச்சன் பெப்சி பத்தி பேசுறாங்கனு வெளியே போறான் அதுக்கும் லைக் பண்றீங்க....
என்னதான்யா செய்யனும் நாங்க?
போங்கயா போங்க

வருத்தத்துடன்
- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (23-Jan-17, 10:07 am)
பார்வை : 228

மேலே