படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிறகுகள் இருந்தும்
பறக்க பயமேன்
துணிவுடன் பற !

குருவி இனம் மட்டுமல்ல
காளை இனமும் அழித்தது
உலகமயம் !

தஞ்சம்
கையில்
அழகிய குருவி !

தாயைப் பிரிந்த
கவலையில் தவிக்கும்
குருவி !

கூட்டை அழித்து
குடும்பத்தைச் சிதைத்தனர்
மரத்தை வெட்டி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Jan-17, 7:03 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 100

மேலே