கவிதையே உனக்கொரு கவிதை

கவிதையே!
உனக்கொரு கவிதை


கவிதையே!
உனக்கொரு கவிதை சொல்வேன்
உன் கண் கள் இரண்டும்
உவமை அணிக்கு தப்பி பிறந்தன
உன் நாசிக்கு
உருவகம் சொல்ல உலகில் பொருள் இல்லை
உன் கோவை கனிஇதழ்களுக்கு
இல் பொருள் உவமை அணியும் கூட குறைவானதே
உன் வலம்புரி சங்கு கழுத்தோ
உயர்வுநவிற்சிக்கும் மேலாக
நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை
இவ்விரண்டும்
உள்ளுறை உவமமாக
அன்பே !
உன்னை நான் முதன் முதலாக
சந்திக்கும்போது குறிஞ்சித்திணை
உன்னை காணாத கணங்கள் முல்லை தினை
நீ என்மீது கொண்ட கோபம் மருதமும் என்றால்
உன்னை காணாமல் என் கண்ணீர் நெய்தலாகும்
நீயோ நானோ இப்பிறவியில் சேராமல் போனால் பாலையடி
வறண்ட பாலையடி
உன் சிரிப்போ குறள் வெண்பா
உன் பேச்சோ கொஞ்சிவரும் வஞ்சிப்பா
உன்னடையோ ஆசிரியம்
உன் எழிலோ களிகூர வைக்கும் கலிப்பா
கவிதையே ! நீயே ஓர் கவிதை உனக்கு
எங்கனம் வடிப்பேன் இன்னொரு கவிதை

கவிஞர் ச ரவிச்சந்திரன்

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (23-Jan-17, 7:24 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 877

மேலே