அழகு சுவடு

மலரிலும் மேன்மை ..!
பெண் அவள் மென்மை.

கனி இதழ் கோவை ..!
நான் தேடும் பாவை ..,!

நலிந்த தேகம் ..
அவளோடு
உறவாட வேண்டும்
வான் நிலவோடு ..,

கயல் விழி கண்கள் ..,
வலை வீசும்
மீன்கள் .,

சிற்றிடை மேனி
கிறங்கி போனேன்
வா நீ ..!

பளிங்கு போன்ற முதுகு .
நான் படர்ந்து செல்லும்
படகு ..,

வாழை தண்டு கால்கள்
வளைந்தாடும் அவள்
குரல் வலைகள் .

கூந்தல் என் கூடாரம்
மண பந்தலிலே அவள்
என் தாரம் .

முத்து போன்ற பல் அழகு
மொத்தத்தில் அவள்
பேரழகு ..!

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (24-Jan-17, 1:32 am)
Tanglish : alagu suvadu
பார்வை : 1240

மேலே