சப்புரங்கு

யாரப் பாட்டிம்மா 'சப்புரங்கு'- ன்னு கூப்படறீங்க?
☺☺☺☺
☺☺☺☺☺
😊😊😊😊😊😊😊
அடி வாடி தாமரை. நா யாரக் கூப்படப்போறேன்? வடக்க மாத்தலாகிப் போனானே உஞ் சின்ன மாமன் இமயவரம்பன், அவன் அஞ்சு வருசம் கழிச்சு குடும்பத்தோட வந்திருக்கறான். அவனோட நாலு வயசு பையந்தான் எஞ் செல்லப் பேரன் போல்லாத குறும்புக்காரன் சப்புரங்கு.
☺☺☺☺
😊😊😊😊😊😊
அதென்னங்க பாட்டீம்மா சப்புரங்கு-ன்னு பையனுக்கு சின்ன மாமன் பேரு வச்சிருக்காரு?
☺☺☺
😊😊😊😊😊
ஏண்டி தாமரை நம்ம தமிழ் நாட்டில இருக்கற முக்காவாசிப்பேரு புள்ளைங்களுக்கு இந்திப் பேரத்தான் வச்சிருக்காங்க. வடக்க போயி வேல பாக்கறவன் தாம் பெத்த புள்ளைக்கு தமிழ்ப் பேரய்யா வச்சிடுவான்
☺☺☺
😊😊😊😊😊
சரிங்க பாட்டிம்மா, "'சப்புரங்கு'-"என்னடா அர்த்தம்னு உஞ் சின்ன மாமங்கிட்டக் கேட்டன். அவஞ் சொன்னான் "சப்புரங்கு-ன்னா 'வானவில்'-னு அர்த்தம்மா".
@@@@
ஓ அப்பிடியா. "வானவில்-ன்னு அர்த்தம்மா?". நல்ல அர்த்தம் பாட்டிம்மா. ஆனா உலகத்தில எந்தத் தமிழனும் தம் பிள்ளைக்கு 'வானவில்'-ன்னு பேரு வச்சிருக்கமாட்டாரு. நம்ம ஆளுங்கதான் பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேர வைக்கறதுக்கு விரும்பறதில்ல.
☺☺☺☺
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

Sobrang (unisex name) = வானவில்

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (24-Jan-17, 1:38 am)
பார்வை : 228

சிறந்த நகைச்சுவைகள்

மேலே