ஒருபக்க காதல்கதை பாகம்-18

அவள்: அம்மாக்களுக்கென அச்சடிக்கப்பட்ட குணாதிசயங்களில் ஒண்ணுகூட உங்ககிட்ட இல்லையே, அச்சடிக்கும்போது மிஸ் ஆயிட்டிங்களா?


அம்மா: கொதிச்ச எண்ணைல கடுகு போட்டதும் வெடிக்கும், அந்த வெடிப்பு அடங்குறதுக்குள்ள சமைக்க ஆரம்பிக்கிறது ஒரு ரகம், வெடிப்பு அடங்கி எல்லாம் தனிஞ்சப்புறம் சமைக்க ஆரம்பிக்குறவங்க ஒரு ரகம்

அவள்: என்னை கடுகெல்லாம் எனக்கு தெரியாது

அம்மா: (கடுகு வெடித்த பிறகு தண்ணி ஊற்றி காய்கறி போட்டுவிட்டு அவளிடம் பேச ஆயத்தமானாள்) நானும் முதல்ல எல்லா அம்மா மாதிரி சொந்தக்காரங்கள குறை சொல்லிட்டு, ஏத்துமேலையூம் பற்றில்லாம, பிள்ளைங்க நல்லா இருக்கணும் அவனுக்காக வாழணும்னுதான் அச்சடிக்கப்பட்டு இருந்தேன். என்னோட நெகடிவ்னு அப்புடியே இதெல்லாத்தையும் எழுதி ஹால்ல ஓட்டிட்டான், அதப்பாத்துட்டு வர்றவங்க போறவங்கயெல்லாம் விசாரிச்சாங்க, எனக்கு கெட்ட கோவம் வந்துருச்சு

நானும் ரெண்டுவாட்டி கிழிச்சு போட்டேன், ஒரு கட்டத்துல இதெல்லாம் இல்லாத மாதிரி நம்ம பைய்யன் முன்னாடி நடிப்போம்னு அவன் வீட்ல இருக்கும்போது நடிச்சு நடிச்சு பின்னாடி அதுவே நானா மாறிட்டேன்.

கொஞ்சம் கொஞ்சமா என் பய்யனை தவிர்த்து எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, எனக்கு புடிச்சதும் சிலது இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன், என்பைய்யன் அடிக்கடி சொல்லுவான் ..நம்ம சந்திக்கிற மனிதர்கள்தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறாங்க-ன்னு, நான் உருவாக்கிய பிள்ளையே நான் சந்திச்ச மனிதரா அமைஞ்சுட்டான்

அவள்: இத கதையா கூட நான் படிச்சதில்ல, முதல் முறையா நான் கேட்ட கேள்விக்கு 4 வரி மிகுந்து பதில் சொல்லிருக்கீங்க (என நகைத்தாள்)

அம்மா: ஒரு விஷயத்தை சொல்ல எவ்வளவு வார்த்தை உபயோகப்படுத்துறோம்க்றது கேட்கப்போறவங்க மூளையை பொறுத்தது

அவள்: அப்போ எனக்கு மூளை கம்மி ?

அம்மா: குழந்தமா நீ..

அவன்: அம்மா கடுகு எண்ணெய் தவிர எல்லாம் வாங்கியாச்சு

அவளும், அம்மாவும் சிரிக்க இவன் ஒன்றும் அறியாமல் பிதைத்து நின்றான்

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (24-Jan-17, 9:17 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 631

மேலே