உன் திருமண அழைப்பிதழ்

சென்று வா மனமே
என்று சொன்னவனிடம்
என் மனம்
செல்லாமல் போன பின்பு
எங்கு செல்ல....?
இத்தனைவருடம் உன்னுள் தானே
பதுக்கி வைத்திருந்தாய்
புதுமணப்பெண் கண்டவுடன்
என் மனம் கசக்கிறதா?
செல்லாத என் மனதை
நான் என்ன செய்ய?
உன்னால் தானே என் மனம்
செல்லாமல் போனது....
விழலுக்கிறைத்த நீர் போல
மனமற்றவனுக்கா நான் காதல் வார்த்தேன்?
எதற்கெடுத்தாலும் எனக்காக என்றாயே.....
உன்
திருமணமும் எனக்காகத் தானா?
நீ தராத
உன் திருமண அழைப்பிதழ்
வந்து என்னை அழைக்குதடா......
உன்
தோழர் கூட்டமெல்லாம்
எனக்கு ஆறுதல் தர,
நீ எங்கே போனாய்.....
காதலின் போது ஒலித்த
உன் அலைப்பேசி கூட
எனை வெறுத்து தான்
அணைந்து கிடக்கிறதோ.....
என் காதல் மீது
நான் கொண்ட நம்பிக்கை
நாட்களோடு நகர்ந்து
இன்று உன் திருமண
அழைப்பிதழோடு
நிற்கிறது........
ஆசைகள் எல்லாம் அதிர்ந்து
இன்ப வாயில் துறந்து
கண்கள் திறந்து
கனவுகள் பாழாவது கண்டு
துவண்டு கிடக்கிறேன்...

(பிரதமர் கருப்பு பண ஒழிப்பு-பழைய பணத்தை திரும்ப பெற்றதை போல,உன்னிடம் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா? என்று இப்போதும் ஏங்கும் என் மனதிற்கு எப்போதும் பதில் கிடைக்காதா?)

எழுதியவர் : மீனாட்சி (24-Jan-17, 10:34 pm)
பார்வை : 377

மேலே