மரணம் ஒரு பயணம்

உலகிலேயே பணம் கொடுத்தாலும், பொன், பொருளை அள்ளித் தந்தாலும் மாற்ற முடியாத, விலைக்கு வாங்கி தப்பித்துக் கொள்ள முடியாத உண்மையொன்று உண்டெனில் அது நம்முடைய மரணமே....

பிறந்தவர் யாவரும் மரணித்தே ஆக வேண்டுமே....
அவ்வாறு நிகழும் மரணமோ இயற்கையானதாக நிகழ வேண்டுமே தவிர,
செயற்கையானதாகி விடக்கூடாதே....

தற்கொலை செய்து கொள்ள எண்ணங்கொண்டோரே!
சற்றே சிந்தியுங்களேன்...
நாம் பிறந்ததே வாழ்வதற்காகத் தானே தவிர வாழாது மரணிப்பதற்கு அல்ல...

வெற்றியும், தோல்வியும் சமமென்ற உணர்வே, வாழ்வதற்குரிய அருமருந்தாகுமே...
பிறப்பும், இறப்பும் சமமென்ற உணர்வே, மனோபலத்தின் உச்சமே....

நமது உடலையே நாம் உரிமை கொண்டாட இயலாத போது, எந்த உரிமையைப் பெறுவதற்காக பிற உயிர்களை மரணிக்கச் செய்கிறோம்???....

மரணமென்னும் சிந்தனை, பயம் அகற்றுமே...
நல்லறம் காட்டுமே...
சிந்திக்கத் தூண்டுமே...
அன்பையும், கருணையையும் நிலைநாட்டி மனிதநேயம் போற்றுமே....

தாய், தந்தையால் கருவாகி உருவாகி உலகில் பிறந்த நாம் உடலால் அடையாளம் காணப்பட்டு ஆளுக்கொரு பெயரிட்டு அழைக்கப்படுகிறோமே...
இவையெல்லாம் நிலைப்பதில்லையே,
கொள்கையும், லட்சியமும், உயர்ந்த செயலும் செய்யாதோரின் வாழ்விலே....

தொடரும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Jan-17, 9:48 pm)
Tanglish : maranam oru payanam
பார்வை : 1277

மேலே