தனி தமிழ் தேசம்

தனி தமிழ் தேசம்..!

ஜனவரி 26.,2017

68வது குடியரசு தினத்தை இந்திய துணைகண்டத்தில் அணைவரும் கொண்டாடி வருகின்றனர்.

உண்மையில் இதை அணைவரும் மகிழ்வுடன் தான் கொண்டாடுகிறார்களா...?

இங்கே அணைவருக்கும் சுதந்திரமும்..சட்டதிட்டங்களும்
சமமாக இயங்குகிறதா...?

அருமையான சாதிக்கொடுமை
அதை வைத்து அரசியல் பிழைப்பு..

கையில் காசு இருப்பவர் தான்
சட்டத்தை நோக்கி ஓடும் நிலை..

அடித்தட்டு மக்களை சுரண்டும்
அடியாட்களாக போலீசார்...

(எல்லோரும் அப்படி இருந்து விடவில்லை. ஆனால் விசக்குடத்தில் ஒரு துளி தேன் இருந்து என்ன பயன்?)

இப்போது தமிழகத்தில் காஷ்மீர் போல் ஈழம் போல் பிரிவினை
பேச்சு அடிபடுகிறது.

ஏன் அடிபடுகிறது என்பதை சிந்தனை செய்து பார்க்க வேண்டும்.

அண்டை மாநிலங்களுடன் நட்புறவு இல்லை ..

ஒவ்வொரு முறையும் தண்ணீர் கேட்டு உச்சநீதிமன்றம் சென்றால்..

பிறகு எப்படி இங்கு நல்லதொரு நட்புறவு இருக்கும்..

(கேரள.,கர்நாடக., ஆந்திரா மூன்றும் இவ்வாறு தமிழகத்தின் மீதான ஓர் நிலை பாட்டை வைத்துள்ளது)

செம்மரம் வெட்டினர் என்று சுட்டு தள்ளினார்கள் ஆந்திர வனத்துறையினர்...

போன உயிர் திரும்ப வருமா...?

இந்தியா எனும் குடும்பத்தில்
மாநிலங்கள் என்ற சகோதரர்களிடையே சகோதரத்துவமும் அன்பும் அக்கறையும் இல்லாமல் போன பிறகு எதர்க்காக இந்த கூட்டு வாழ்க்கை...?

"கடலுக்கு போனால் கரை திரும்புவமா " என்ற சந்தேகம்
என் மீனவனுக்கு பெரும் பிரச்சனை.

அனுதினமும் அங்கே உயிர் காவு
வாங்கபடுகிறது சிங்கள கடற்படையால்..

இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்த தலைமைகள்.....?

குறைந்தது ஓர் போர் கப்பலை
என் மீனவனின் பாதுகாப்பிற்காக எல்லையில் நிருத்துவதால் என்ன
வந்து விட போகிறது..?

கோலா கம்பெனிக்கு தண்ணீர்
தாமிரபரணி ஆற்றில் இருந்து
எடுக்க அனுமதி...

எப்பேர்பட்ட கொடுமை..
எப்பேர்பட்ட வஞ்சகம்...

விவசாயிகள் தற்கொலை கண்களுக்கு தெரியவில்லை..

கோலா நிறுவனத்தின் லாபம்
முக்கியம்..?

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு மீத்தேன் போகிறது...

இதர்கு தமிழக விவசாய நிலங்கள் எதர்க்காக பலியாக வேண்டும்.

மீத்தேன் திட்டம் ரத்தாகிறது என்று எண்ண வேண்டாம்.

கெயில் நிறுவனத்திற்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் ஒப்பந்த அடிப்படையில் தகராறு.
ஆகையால் தற்காலிகமாக திட்டம் ஒத்திவைப்பு.

ஜல்லிக்கட்டு தமிழனின் பெருமையும் பாரம்பரியமும் கலாச்சாரத்தையும் பறை சாற்றுவது.

இதை தடை செய்ய வெளிநாட்டு
அமைப்புகளுக்கு எதர்க்காக இத்தனை ஆர்வம்..?

ஜல்லிக்கட்டை மையபடுத்தி ஓர்
மிகபெரிய வர்த்தகத்தை எம்மண்ணிலே செய்ய எத்தனிக்கிறார்கள் .
அதர்க்கு இந்த அரசுகளும்
உச்ச நீதிமன்றமும் துணை நிக்கின்றது.

வெளிநாட்டை சேர்ந்த NGO நேராக உச்ச நீதிமன்றத்தை அனுக முடியாது.

உயர் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காவிடில் உச்ச நீதிமன்றத்தை அனுகலாம்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இவர்கள் எப்படி உச்சநீதிமன்றத்தில் தடையை பெற்றார்கள்....?

தற்போது ஜல்லிக்கட்டு தடையை
நீக்க கோரி நடந்த போராட்டத்தில்
பிரதமர்..முதல்வர்.. ஆகியோர்
விமர்சனங்களுக்கு உள்ளானார்கள்...

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக இந்த தமிழினத்தின்
மீது ஏற்படுத்த பட்ட ஒடுக்குதலே
இந்த விமர்சனங்களுக்கு காரணம்.

இந்த அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதில் வைத்திருந்த அதிருப்தியை வெளிபடுத்தகூடிய களமாக மாறி
போனது ஜல்லிக்கட்டுகான போராட்ட களம் .

கடந்த அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து இந்த தமிழ் இனத்தின் மீது வைக்கபட்ட அழுத்தமே இந்த எழுட்சியாக உருப்பெற்றுள்ளது..

ஜல்லிக்கட்டு காக மட்டும் இந்த எழுட்சி நடைபெறவில்லை...

காவிரி நதிநீர்..முல்லைபெரியாறு..சிறுவாணி...கச்சத்தீவு..செம்மரவிவகாரம்..மீத்தேன்...அனுஉலை..

என அனைத்திற்கும் பிள்ளையார் சுழி இந்த ஜல்லிக்கட்டு

இந்த போராட்டத்தை ஏன் மற்ற
தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக அடுத்த கட்ட
நகர்வை நோக்கி எடுத்து செல்ல கூடாது..?

இளைஞர்கள் அரசியல் களம் காண வேண்டிய அவசியமான நிலை இது...

கடந்த அரை நூற்றாண்டு காலமாக திராவிட கட்சிகளாலும் தேசிய கூட்டமைப்பாலும் நம் தமிழர் இனம்..

காவிரி நதிநீர்
முல்லை பெரியாறு
சிறுவாணி
பவானி
பாலாறு
மீத்தேன்
மீனவர்கள் பிரச்சனை
விவசாயிகள் தற்கொலை
அனு உலை
மது ஒழிப்பு
மணல் கொள்ளை
தாது மணல் கொள்ளை..
ஈழம்
ஜல்லிக்கட்டு

என பல்வேறு இடங்களில் நம்மை சுற்றி நசுக்குகிறது..

பாராளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தனிதமிழகம்
என்று முழங்கிய பின்னரே..

தமிழகத்தில் தொழில் துறை முன்னேற்றங்கள் அனைத்துமே ஏற்பட்டது.

அவர் பேச காரணமாக இருந்ததும் அதுதான்.

ஆனால் அன்றைய அரசியல் களம் நமக்கு கிள்ளுக்கீரைகளை தந்துவிட்டு தனிநாடு எனும் கோரிக்கையை நிராகரித்தது.

காலம் காலனாக அண்ணாவை அழைத்து சென்று விட்டது.

கிடைத்த கிள்ளுக்கீரையை வைத்து தான் தான் தமிழகத்தில் ஏற்பட்ட தொழில் து றை வளர்ச்சி கு காரணம் என்று தம்பட்டம் அடிக்கின்றன திராவிட நரிகள்...

இனியும் ஏமாற கூடாது.

இனி இவர்களை நம்பி ஏமாந்தது போதும்..

தொடர்ந்து இந்தியாவில் இருந்து
என் இனத்தை வஞ்சித்து புறக்கணித்து வரும் நிலையில்

தனிதமிழகம் தவிர
கோறுவதை தவிர வேறு வழி தெரியவில்லை..

ஒருவேளை எங்களுக்காக ஒரு நல்லாட்சி மாநில அரசாங்கம் அமைந்தாலும் மேலே குறிப்பிட்ட
காவிரி முல்லை பெரியாறு
சிறுவாணி இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை எப்படி தீர்க்கும்...?

என் மீனவர்கள் அனுதினமும் சாகிறார்கள் அதை தடுக்க மத்திய அரசின் நிலைபாடு தான் என்ன..?

குறைந்தது ஒரே ஒரு போர் கப்பலை அந்த எல்லையில் என் மீனவனுக்கு நிப்பாட்டினால் போதுமே..

இதே தனிநாடாக இருந்தால்..
எங்களிடையே ராணுவம் இருக்கும்.

உலக நதிநீர் ஆணையம் இருக்கிறது.
எங்களுக்கு வர வேண்டிய நீர் தானாக வரும்..

இதை தவிர எங்கள் உரிமையை
வாழ்வாதாரத்தை காத்திட வேறு வழி உண்டா..?

காஷ்மீர் வழியிலோ..ஈழம்
வழியிலோ எங்களுக்கு அத்தகையதோர் பிரிவினை வேண்டாம்.

ரஷ்யா..மலேஷியா-சிங்கப்பூர்..
இதன் வழியில் பிரிவினையை
ஆமோதிக்கிறோம்.

தெரியும் இந்த கட்டுரையை பல
இந்திய தமிழர்கள் புறக்கணிப்பர்
என்று ...

அவர்களும் இக்கட்டுரையை ஏற்கும் நாள் தொலை தூரம் இல்லை.

எழுதியவர் : மோகன் சிவா (26-Jan-17, 2:00 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 829

மேலே