அன்புத் தந்தைக்கு அழகுத் தமிழில் 108 அர்ச்சனை மலர்கள்

அன்புத் தந்தையின் மேல் 108 போற்றித்திருவுரு
அன்பு அப்பாவிற்கு அன்பு காணிக்கை

1 ஓம் அன்புடை தெய்வமே போற்றி
2 ஓம் ஆகம வடிவம் நீயே போற்றி
3 ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
4 ஓம் இன்னிசை ஸ்வர வடிவமே போற்றி
5 ஓம் இதயமலர் அமர்வாய் போற்றி
6 ஓம் ஈடு இணையற்ற என் தெய்வமே போற்றி
7 ஓம் உத்தம வடிவம் நீ போற்றி
8 ஓம் உன்மத்தம் போக்குவாய் போற்றி
9 ஓம் ஊழ்வினைத் தீர்தருள்வாய் போற்றி
10 ஓம் எங்கள் குலதெய்வமே போற்றி
11 ஓம் என்றுமே காப்பாய் போற்றி
12 ஓம் ஏத்துவோம் உன்புகழ் நாளும் போற்றி
13 ஓம் ஏழிசை வடிவமே போற்றி
14 ஓம் ஏழுலகமும் நீயே ஐயா போற்றி
15 ஓம் ஏழையெனைக் காப்பாய் போற்றி
16 ஓம் ஐம்புலன் காப்பாய் போற்றி
17 ஓம் ஐயங்கள் தீர்ப்பாய் போற்றி
18 ஓம் ஐயமின்றித் தொழுவேன் போற்றி
19 ஓம் ஒன்பொருள் நீயே போற்றி
20 ஓம் ஓம்காரப் பொருளே போற்றி
21 ஓம் ஔடதம் நீயே போற்றி
22 ஓம் கெடுதலை அழிப்பாய் போற்றி
23 ஓம் கேடற்ற வாழ்வருள்வாய் போற்றி
24 ஓம் கையறுநிலைப் போக்குவாய் போற்றி
25 ஓம் சங்கடம் தீர்த்தருள் போற்றி
26 ஓம் சந்ததம் காப்பாய் போற்றி
27 ஓம் சர்வ வல்லமை புரிவாய் போற்றி
28 ஓம் சகலமாய் நீயிருப்பாய் போற்றி
29 ஓம் சடுதியில் காப்பாய் போற்றி
30 ஓம் சமரசம் அருள்வாய் போற்றி
31 ஓம் சரண மலர் போற்றுவேன் போற்றி
32 ஓம் சாந்தஸ்வரூபனே போற்றி
33 ஓம் சாந்துணையும் காப்பாய் போற்றி
34 ஓம் சிக்கல்கள் தீர்ப்பாய் போற்றி
35 ஓம் சிந்தையாய் நீயிருப்பாய் போற்றி
36 ஓம் செருக்கற்ற மனமருள் போற்றி
37 ஓம் சோர்வினைப் போக்குவாய் போற்றி
38 ஓம் சோகம் அகற்றுவாய் போற்றி
39 ஓம் சோதர சோதரிகளைக் காப்பாய் போற்றி
40 ஓம் சோதனை போக்குவாய் போற்றி
41 ஓம் ஞாலமும் நீயே போற்றி
42 ஓம் ஞானமும் நீயே போற்றி
43 ஓம் ஞான ரட்சகனும் நீயே போற்றி
44 ஓம் தஞ்சமென சரணடைந்தேன் போற்றி
45 ஓம் தத்துவம் போற்றும் போற்றி
46 ஓம் தந்தையே அருள்வாய் போற்றி
47 ஓம் தன்னலம் கருதா தெய்வமே போற்றி
48 ஓம் தடைகள் தகர்ப்பாய் போற்றி
49 ஓம் தயவுடன் காப்பாய் போற்றி
50 ஓம் தவறுகள் மாய்ப்பாய் போற்றி
51 ஓம் தரணியில் எமைக் காப்பாய் போற்றி
52 ஓம் தருணம் எமைக்காக்க போற்றி
53 ஓம் தலைமைப் பொருள் நீயே போற்றி
54 ஓம் தளர்வை மாய்ப்பாய் போற்றி
55 ஓம் தளரா மனம் அருள்வாய் போற்றி
56 ஓம் தனயனைக் காத்தருள் போற்றி
57 ஓம் தனிப்பெரும் தெய்வமே போற்றி
58 ஓம் தாள்மலர் பற்றினேன் போற்றி
59 ஓம் தீந்தமிழால் இசைப்பாடி மகிழ்விப்பேன் போற்றி
60 ஓம் தெய்வமே காத்தருள்வாய் போற்றி
61 ஓம் தேன்மலரால் அர்ச்சித்தேன் போற்றி
62 ஓம் தேவர் தொழும் தெய்வமே போற்றி
63 ஓம் தேவாதி தேவனே போற்றி
64 ஓம் தேனிசைத் தென்றல் நீயே போற்றி
65 ஓம் நலன் பல தருவாய் போற்றி
66 ஓம் நான் மறை போற்றும் போற்றி
67 ஓம் நாயக வடிவே போற்றி
68 ஓம் நிம்மதி எமக்கருள்வாய் போற்றி
69 ஓம் நிர்மல வடிவம் நீ போற்றி
70 ஓம் நீடுபுகழ் இசைப்பேன் போற்றி
71 ஓம் நீள் நிலம் காற்று யாவும் நீயே போற்றி
72 ஓம் நெஞ்சினில் நிறைபவனே போற்றி
73 ஓம் நெடுவழி துணைநீயே போற்றி
74 ஓம் நைந்து போன என் இதயத்திற்கு ஆறுதல் தருவாய் போற்றி
75 ஓம் பக்கத்துணை வருவாய் போற்றி
76 ஓம் பண்புடன் உன்னைப் போற்றுவேன் போற்றி
77 ஓம் பல்சுவை பாவிசைப்பேன் போற்றி
78 ஓம் பல்சுவை விருந்தளிப்பேன் போற்றி
79 ஓம் பதமலர் பணிவுடனே போற்றுவேன் போற்றி
80 ஓம் பரவசமாய்க் கேட்டருள்வாய் போற்றி
81 ஓம் பவவினைத் தீர்த்தருள்வாய் போற்றி
82 ஓம் பாசமுடன் வந்தருள்வாய் போற்றி
83 ஓம் பாடி ஆடி வழிபடுவேன் போற்றி
84 ஓம் பாமலர் சூட்டுவேன் போற்றி
85 ஓம் பாரினில் எமைக் காக்க போற்றி
86 ஓம் பைந்தமிழ்ச் சொல்லால் துதிப்பேன் போற்றி
87 ஓம் மக்களைக் காத்தருள் போற்றி
88 ஓம் மதிநலம் காப்பாய் போற்றி
80 ஓம் மனதினில் நிறைந்திருப்பாய் போற்றி
90 ஓம் மெத்தவே உன்னைப் போற்றுவேன் போற்றி
91 ஓம் வந்தனை உனக்கே போற்றி
92 ஓம் வரமது நல்குவாய் போற்றி
93 ஓம் வாழ்வாதாரம் நீயே போற்றி
94 ஓம் வித்தக வடிவே போற்றி
95 ஓம் வீர் வழ்வு வாழ அருள்வாய் போற்றி
96 ஓம் வெள்ளை மனம் உடையோய் போற்றி
97 ஓம் வெற்றி நல்கிடுவாய் போற்றி
98 ஓம் வேண்டப்படும் பொருள் நீயே போற்றி
99 ஓம் வேண்டுதல் வேண்டாமை அற்றவனே போற்றி
100 ஓம் ஓம் வேண்டுதலை நிறைவேற்றுபவனே
101 ஓம் வேதனை மாய்த்தருள்வாய் போற்றி
102 ஓம் வேள்விகள் யாவும் உமக்கே போற்றி
103 ஓம் வேறுபாடற்ற மனமருள் போற்றி
104 ஓம் வையத்தோரைக் காத்தருள்வய் போற்றி
105 ஓம் வையம் உள்ளளவும் போற்றுவேன் போற்றி
106 ஓம் ஜெகம் புகழ் தெய்வமே போற்றி
107 ஓம் ஜெயம் பலத் தருவாய் போற்றி
108 ஓம் ஜெய ஜெய வடிவம் நீயே போற்றி போற்றி

குறிப்பு:
தந்தையை தெய்வமாக வழிபடுபவர்கள் மனமுருக இதனை வேண்டிப் பணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அன்புடன்
திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி,
கோவை-22

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (29-Jan-17, 11:39 am)
பார்வை : 172

மேலே