மதிய வேலை உணவு

நானும் என் சகோதரனும் பொருள் வாங்கலாம் என்று ஒரு கடைக்கு சென்றிருந்தோம்,அது ஒரு பரபரப்பான நகரம் என் சகோதரன் பொருள் வாங்க கடையினுள் சென்றிருந்தான்

எனக்கு சிறுவயதிலிருந்தே வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடிக்கும்

நான் வெளியே வேடிக்கைப்பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்

அவர் பார்க்க கூலி தொழிளாலியைப்போல் தெரிந்தார் ,கட்டிடம் கட்டும் கூலித் தொழிளாலி என்று எண்ணுகிறேன்

அந்த தொழிலாளி பூட்டப்பட்ட ஒரு கடையின் முன் சமணம் இட்டு அம்ந்திருந்தார்

அவரின் தாங்கமுடியாத பசி அவரிடம் வெளிப்படையாகவே தெரிந்திருந்தது

தாங்க முடியாத பசியுடன் அவர் ரொம்ப நேரமாக யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தார

அவர் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த நபர் வராததால் பசியை
பாெறுக்க முடியாமல்

தான் கையில் வைத்திருந்த பொட்டலத்தைப் பிரித்தார்,வாழை இழையில் அதில் மதிய அளவுச் சாப்பாடு இருந்தது

இழையில் தனக்குப் பாதியும் இழையின் மற்றொரு பக்கத்தில் அளவுச் சாப்பாட்டை பாதி பிரித்து வைத்தார்

அந்த தொழிலாளி உண்ண ஆரம்பித்தார் ,சற்று நேரத்தில் அந்த தொழிளாலி எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நபர் வந்தார்

அந்த நபரும் இவரைப்போலவே அழுக்கு உடையும் கூலித்தொலிலாளியைப்போலவே காட்சியளித்தார் இவரின் முகத்திலும் கடும் பசி , இவரும் அதே இழையில் மற்றொரு பக்கத்தில் அந்த
தொழிலாளி பாதியாக பங்கிட்டு வைத்திருந்த உணவை உண்ணலானார்

இருவரும் தங்கள் இருவருக்கும் இருந்த தாங்க முடியாத பசியை ஒருவருக்கொருவர் விவரித்துக்கொண்டே ஒரே இழையில் இருவரும் உண்டணர்

எனக்கு நிச்சயம் தெரியும் இந்த உணவு அவர்களின் வயிற்றை நிரம்பச் செய்திருக்காது

ஆனாலும் கூட

அவர்கள் இருவரும் வயிறு நிரம்பி விட்டது இப்போது தான் நிம்மதியாக சந்தோசமாக உள்ளது என ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர்

அதில் யாரேனும் ஒருவர் நினைத்திருந்தால் அந்த அளவுச் சாப்பாட்டுக்கு பதில் ஒருவர் மட்டும் fullmeals சாப்பிட்டிருக்கலாம் ,ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை

இருவரும் பகிர்ந்துண்டனர் அதுவும் ஒரே இழையில்

இன்று தாயும் பிள்ளையும் கூட ஒரே இழையில் சாப்பிடுதில்லை


இது நான் உண்மைாயக கண்ட காட்சி
இது ஒன்றும் கற்பனையல்ல


-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (31-Jan-17, 11:50 am)
Tanglish : madhiya velai unavu
பார்வை : 1041

மேலே