அனுப்பம்மா

அனுப்பம்மா
😊😊😊😊😊😊😊
பாட்டிம்மா உங்களயே காடுவரச்சொல்லுது, வீடு போகச் சொல்லுது. போன மாசம் தான் பேரம் பேத்திக்கச்க கொள்ளுப் பேரங்க பேத்திங்களும் உங்க நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினாங்க. என்னவோ உங்க அம்மா இன்னும் உயிரோட இருக்கற மாதிரி ' அனுப்பம்மா, அனுப்பம்மா -ன்னு எதையோ அனுப்பச் சொல்லறீங்க?
😊😊😊😊😊😊
அடியே என்னோட அம்மா செத்து நாப்பது வருசம் ஆகுதடி. அமெரிக்காவில இருக்கற எங் கொள்ளுப் பேத்தி அனுப்பம்மா வந்து இருக்காறடி. அவ எதோ சாப்புட்டு வேரு தொழில் சாலையில் வேலையில இருக்கறளாம். அங்க வேரை எல்லாம் சாப்பாட்டுப் பொருளா மாத்துவாங்க போல இருக்குது. அந்தப் பேரத் தமிழ்ல சொல்லுடின்னு கேட்டடா 'மென்னுபொருள்ன்னு மென்னு பொருள்ன்னு சொல்லறா. என்னமோ சாப்படற பொருள்களத் தயாரிக்கிற தொழில்சாலையா இருக்கும். அனுப்பம்மா கொள்ளை அழகுடி. ஆனா அவ பேருதான் எனக்குப் பிடிக்கல. சரில்லடி அல்லி.
☺☺☺
பாட்டி உங்க கொள்ளுப் பேத்தி பேரு அனுபமா. அனுப்பம்மா இல்லை.
😊😊😊
இதென்னடி கூத்து. அனுபவம் இருக்குதா இல்லையான்னு கேக்கற மாதிரி இருக்குது?
☺😊😊😊😊
பாட்டிம்மா அனுபமா-ங்கற பேருக்கு நல்ல அர்த்தமெல்லாம் இருக்குது: மிகச்சிறந்த, மேம்பட்ட, முதல்தரமான, சிறப்புமிக்க, இணைத்துப் பார்க்க முடியாத. இவ்வளவு அழகான அர்த்தமெல்லாம் இருக்குதங்க பாட்டிம்மா.
☺☺😊😊😊
எத்தனையோ அர்த்தம் இருந்துட்டு போகட்டும். நம்மா அனுப்பா பேர தமிழ்ல சொல்லி 'மிகச்சிறந்தவ இங்க வா, மேம்பட்டவ இங்க வா, முதல் தரமானவ இங்க வா,சிறப்புமிக்கவ இங்கவா, இணைத்துப் பார்க்க முடியாத இங்க வா- ன்னு கூப்புட்டா நல்லவா இருக்குமா? இது மாதிரி பெயர்ச் சொல்லே இல்லாத பேருங்ககளயா பிளைங்களுக்கு வைக்கிறது?
☺☺😊😊
பாட்டிம்மா பேருங்களத் தெர்வு செய்யக்கூட இந்திக்காரங்களுக்கே கொழப்பம்
😊😊😢😊😊☺😊😊😊😊😊😊😊😊

எழுதியவர் : மலர் (4-Feb-17, 2:48 am)
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே