அழகு தமிழே

அழகு தமிழே !
அன்பு மொழியே !
இன்பக் கவியே !

உன்னை கொஞ்சியும்
உன்னில் மூழ்கியும்
பித்தனானேன் !

பித்தின் பொருட்டு
பல்வகை அணியிலும்
அழகிய யாப்பிலும்
எண்ணில்லா பொருளிலும்
வர்ணனை சொல்லிலும்
மொத்த எழுத்திலும்
நிதமும் திளைத்தேன் !

உடலின் அங்கமாம் -எம்
நாவுக்கு உதவ
உணர்ச்சியை தெரிவிக்க-தந்த
உம் மந்திர
எழுத்தின் அழகை
கண்டு ரசித்தேன் !

தனித்தே நின்றால்
மதிப்பு இல்லை
ஒன்றோடு ஒன்று
இணைத்திட எழுத்தை
ஒன்றாக்கிய வசிய
சொல்லின் அழகை
கண்டு ரசித்தேன் !

சொல்லிய சொல்லிக்கு
படிக்கா பாமரனும்
பொருளை புரிந்திட
வார்த்தைக்கு விளக்கமளிக்கும்
பொருளின் அழகை
கண்டு ரசித்தேன் !

சீராய் அமைந்திட
சீர்கள் வகுத்து
அடியென பிரித்து
பாவுக்கு உருவமிட்ட
யாப்பின் அழகை
கண்டு ரசித்தேன் !

பெண்ணுக்கு அழகாம்
அணிகலன் என்
தமிழுக்கு அழகாம்
அணி என
பாவில் அமைந்த
அணி அழகை
கண்டு ரசித்தேன் !

உன் உள்ளார்ந்த
இலக்கியச் சுவையிலும்
இலக்கண நடையிலும்
என்னையே மறந்தேன் !

எழுதியவர் : புகழ்விழி (4-Feb-17, 11:52 pm)
Tanglish : alagu thamizhe
பார்வை : 542

மேலே