தமிழ் திரை உலகை காப்பாற்ற

இன்று ஸ்டூடியோ க்ரீன் சிங்கம் 3 திரைப்பட தயாரிப்பாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இணைய தளத்தில் சிங்கம் 3 திரைப்படம் வெளியாவதை தடுக்க உத்தரவு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் சென்னை உயர் நீதி மன்றம் இது சிவில் வழக்கு என்றும் ரிட் மனு செய்ததை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் . இணையதளங்களில் திரைப்படங்கள் ஏன் வெளியாகின்றன? என்று தெரியுமா ?

திரைஅரங்கங்கள் புதிய திரைப்படங்கள் வெளியாகும் தருணங்களில் டிக்கெட் கட்டணத்தை அவர்கள் இஷ்டத்துக்குரூபாய் 200 ரூபாய் 250 என நிர்ணயிப்பதும் சைக்கிள் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 20 ஆகா வசூலிப்பதும் ஆகா ஒருநபர் ஒரு புதிய திரைப்படம் பார்க்க ஏறத்தாழ ரூபாய் 300 ஆகிறது 4 பேர் அல்லது 5 அடங்கிய ஒரு குடும்பம் பார்க்க ஏறத்தாழ ரூபாய் 1500 வரை ஆகிறது

இப்படிப்பட்ட சூழ் நிலை தான் திருட்டு விசிடி இணைய தளங்களில் திரைபடவெளியீடு போன்றவை நிகழ்கிறது எனவே திரை அரங்க உரிமையாளர்களின் பேராசையே மேற்கண்ட செயல்களுக்கு காரணமாகிறது
எனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் திரை அரங்க உரிமையாளர்களை கண்காணித்து டிக்கெட் கட்டணத்தை ரூபாய் 100 என நிர்ணயித்தால் மேற்கண்ட தவறுகளை களைய முடியும்

நடிகர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும் திரைவிநியோகஸ்தர்களும் நகர்ப்புறங்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல அறிவுறுத்தல் வழங்கினால் திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைத்தால் நிச்சயம் திருட்டு விசிடி இணைய தள வெளியீடுகள் இவை மக்கள் ஆதரவின்றி தானே மறையும்

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (6-Feb-17, 2:15 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 377

சிறந்த கட்டுரைகள்

மேலே