நடையில் இன்பம்

அலைதானென நினைத்தேன்.. ஐயோகொடூரமாகக் தாக்கவந்த..
ஆழிப்பேரலை மீண்டும்வந்து நம்நெஞ்சையாட்டி வைக்குமே?..

ஆழியுன் பேரலையால் நீஇட்ட பேரிடரால்..
பாவியென் நினைவுக்கு புதைந்து மண்ணாகிவிட்ட
பிணங்களல்லவா ஞாபகம்வருகிறது!..

மனித வாழ்வு முடியும்வரை இனிமுற்றிலுமாகயுனை
மறக்க முயற்ச்சி செய்வோம்..நிச்சயமாக நீயில்லையென.

மாற்றியோசிப்போம்...

மனமூன்றிப் படத்தைப் பலமுறை பார்க்கும்போது
மனத்தினுள் ஒளிந்திருக்கும் மாயம்விலக வழியுண்டு!

உற்றுப்பார்த்தால் சாலைமுழுதும் கரும்புகைபோலவும் தெரிகிறதே!..
ஊர்ந்து செல்லும் வேகவாகங்களின் வயிற்றெரிச்சல் புகையாக வெளியேறியதா?..

இல்லை! இல்லை! அதுவுமில்லை..

தயிர்போல் நிலத்தை யுழுதுபயிர்செய்த இடம்தானின்று..
தார்சாலையானதோ!, மழை பொய்த்தவாய்ப்பால்?..

வறண்ட சாலையிலோடும் வற்றியநீரை
வருத்தமுடன் பார்ப்பதுயார் கார்மேகம்தானே!

இல்லை! இல்லை!

இன்னுமொருமுறை மாற்றியோசி..

நீலத்தண்ணீருக்குள் முகமுற்றுப் பார்க்கையில்..
நிஜபிம்பம் நிழலாய்த் தெரியுது!

தலைவணங்கித் தரைவழியே பார்த்தால்..
தலையிரண்டு கொழுத்தகாலுடன் நடப்பது தெரியும்...

அதிகஎடை ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...
அனுதினமும் மருத்துவர் சொல்லும் அறிவுரையேற்று..

பெருத்த உடல்மெலிதாக இளைப்பதற்கு..உடல்..
பெருத்த இருநபர் இறுமாப்பாய் நடப்பதுபோலும் தெரிகிறது!

ஊளைச்சதையொழிய ஒருமணிநேரம்..தொடர்ந்த
காலை(ளை)நடை சிறந்ததென உரைக்கிறார்போலும்.

பலநாள் நடைபயிலுதல் யுடல்நலத்துக் குகந்ததெனத்தெரிந்தும்.
ஒருநாள் நடைபயின்ற தைமறுநாள் மறக்கும் நபராகயிருக்கலாமோ?..

கூட்டத்தைக் கண்டால் ஓட்டமெடுக்கும் எண்ணத்தில்..
கூட்டுப்பயிற்ச்சியில் இருவருக்கும் நம்பிக்கையில்லையோ?.இது

நடைபயிற்சியா? அல்லது பேச்சுப்பயிற்சியா?..விடைகாணந்த
நண்பர்களோடு நடந்தால் தாணுண்மை தெரியும்?...

நடைபயில உகந்தநேரம் பசுமையான காலைதானென..
நயமாகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கோம்!

காலையெழும் பொழுதின்முன்னே துயிலெழுந்துநாம்..
காலாற நடந்தாலே நோயின்றி வாழலாம் வாழ்நாளெலாம்!

குறுதியில் தீயகொழுப்பு திட்டமாக கரைய..
உறுதியுடன் நடக்கவேண்டுமொரு மணிநேரமாவது!

கால்கை விரித்து வேகமாக நடந்தால்நம்
இதயமும் விசாலமாக வியங்கும்!

நலமுடன்வாழ அன்றாடம் நடைபயிலவேணும்!
உயர்வுடன்வாழ உற்றாரை மதித்து நடத்தல்வேணும்!

பூங்காவில் நடப்பதிலேயொரு மனமகிழ்ச்சி!
புல்வெளியில் நடப்பதிலேயொரு சுகம்!

கால்கொதிக்க கடும்வெயிலில் நடப்பதைவிட..
உள்ளங்கால் குளிரஈரஇதமான நடையில் தானதிகயின்பம்.
==========================================================================
படக்கவிதை போட்டிக்காக வல்லமை மின் இதழுக்கு அனுப்பட்டதன் "மறுபதிவு".

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (6-Feb-17, 5:10 pm)
பார்வை : 155

மேலே