ரசிக்கின்றேன் அவளை

ரசிக்கின்றேன் அவளை :
கல்லூரியின் தொடக்கம் முதலாம் ஆண்டு சேர்கிறான் கவி. பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரி பருவம்தொடங்கியது.கல்லூரி மாணவன் என்றதுமே அவனுக்குச் சந்தோஷம்.அவன் வெள்ளிக்கிழமை நாள் அன்று கல்லூரியில்சேர்ந்து விட்டு இரண்டு நாள் விடுமுறை பிறகு திங்கட்கிழமை கல்லூரிக்கு வந்தான் அங்கு எல்லாமே புதிதாகஇருந்தது.அதுவும் இவன் தமிழ் வழியில் தான் படித்தான் ஆங்கே ஆங்கிலம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவனும்போராடினான் ஆனால் ஆங்கிலம் மட்டும் தான் வரவில்லை சில நாட்கள் கழித்து ஆங்கிலம் வழி படித்த பெண் கல்லூரியில்சேர்ந்தாள் ஆனால் அவளுக்குத் தமிழ் தெரியாது அவள் எழில் அழகு .பள்ளியில் நடக்கும் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளிலும்கலந்து கொண்டு அசத்துவாள் என்று அவளின் பெருமையை சொன்னார்கள் .ஆனா நான் திரும்பி பார்த்தால் கூட அப்படிஎதுவும் இல்லை ,அடங்க மாட்டான் திருந்த மாட்டான் படிக்க மாட்டான் உருப்பிட மாட்டான் என்ற பெருமை தான் இதைப்போய் சொன்ன சிரிப்பார்கள், அதனால் அமைதியாகத் தான் இருக்கனும்.ஏதோ ஒரு வழியாக இரண்டு மாதம்முடிந்தது.எல்லோரும் நல்ல பழகினார்கள். அவளும் என்னிடம் மெதுவாகப் பழகினால். அதே நேரத்தில் நான் அவளுக்குத்தமிழ் கற்று கொடுத்துவிட்டேன் . எனக்கும் ஆங்கிலத்திற்க்கும் இனிமேல் எந்தப் பிரச்சனையும் கிடையாது .கல்லூரியில்கலை நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று பேசி கொண்டு இருந்தார்கள் நானும் எதாவது செய்யானும் என்று நினைத்தேன் .அப்போது அவளே வந்து என்னுடன் ஜோடியாக நடனம் ஆடுவாயா என்று கேட்டாள் எனக்குத் தல காலு புரியவில்லைஅவ்வளவு சந்தோஷம்.நடனம் ஆடிவிட்டு வந்ததும் இரண்டு பேரும் செம ஜோடியினு சொன்னார்கள்.எல்லமே ஜாலியாகமுடிந்தது. அதன் பிறகு தேர்வு நடை பெற்றது விடுமுறை வந்தது .விடுமுறை நல்ல ஜாலியாக கொண்டாடி முடித்துவிட்டு .திரும்பவும் கல்லூரி தொடங்கின. ஆனால் அவள் வரவில்லை எனக்கு மன வருத்தமாகவே இருந்தது ஒரு வாரம் கழித்துவந்தாள் அவள் மட்டும் அல்ல அவளுடன் தங்கையும் வந்தாள் `அவள் முதலாம் ஆண்டு சேர்ந்தாள் .ஏதோ தெரியவில்லைஅவளைப் பார்த்ததுமே என் உள்ளத்தில் அப்படி ஒரு வேகம்.அவள் விழியைப் பார்த்தேன் என் வாழ்க்கையின் வழியைத்தொலைத்தது போல் உணர்ந்தேன் .அவ்வளவு அழகு இல்லை ஆனால் அவள் எனக்கு வரம் அல்லவா , அவள் அக்காவிடம் நான் பழகுவதைஅவள் தவறாகா புரிந்து கொண்டாள். நாங்கள் எங்கே சென்றாலும் அவளையும் அழைத்துக் கொண்டு தான் செல்லுவோம்அப்போது அவளை அகம் மலர ரசித்தேன் . அவள் சிரித்தாள் போதும் என் கண்ணில் இருந்து கண்ணீர் சிந்தும்அவ்வளவு ரசித்தேன் அவளை .அவளிடம் நான் தனிமையில் இருக்கும் போது என் காதலை புரியவைத்தேன். எப்போது என்றால்கல்லூரி சுற்றுப்பயணம் சென்றோம் அப்போது தான் .அவள் என் அருகில் இருந்தாள் பேருந்தில் அவள் அக்கா அவளருகில் .நான் ஜன்னல் ஓரம் எண்ணில் அடங்கா சந்தோஷம் கொண்டு இருந்தேன் அவள் என் அருகிலேன்று .ஆனா எனக்குவேர்த்துக் கொட்டியது கை எல்லாம் நடுங்கியது . அதை நான் சமாளிக்க ஜன்னலை மெதுவாகத் திறந்தேன் .சிறிது நேரம்காற்று வாங்கினேன் அந்த நேரம் அவள் முடி காற்றில் பறந்தும் இதழைக் கட்டி தழுவியும் இருந்தது .காது ஓரம் இருக்கும்மச்சம் என்னை மிச்சம் வைக்காமல் கொன்றது. இமைகள் இதமாகப் பேச என் மனம் ஏக்கத்தில் காற்றாய் அவள் மீது வீசத்தொடங்கின. அவளைப் பார்த்து பயித்தியம் போல் நான் சிரித்துக் கொண்டு இருந்தேன் .விடியற்காலை மூன்றுமணியளவில் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். பிறகு எல்லாருமே நாளைக்குச் சேலை கட்டிக் கொண்டு தான் வர வேண்டும் பெண்கள் மட்டும் என்று சொல்லி விட்டு நான் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் எங்களுடைய அறைக்குச் சென்றோம்.பிறகுஅவங்களுடைய உடைமைகள் என்னிடம் இருந்தது அதனைக் கொடுக்க அவர்கள் அறைக்குச் சென்றேன் அப்போது அவள்அக்காவிடம் எனக்குச் சேலை கட்டத் தெரியாது என்றாள் அப்போது நான் கட்டிவிடட்டுமா என்று கேட்டேன் அதுக்கு அவள்வெட்கப்பட்டாள் அவள் அக்கா போடா என்றாள் நான் கொடுத்துவிட்டு என்னுடன் அறைக்குச் சென்றேன் .எனக்குத் தூக்கமேவரவில்லை அவள் சேலையில் எப்படி இருப்பாள் என்ற கனவு தான் அப்படியே மணிகள் நகர்ந்தது விடியற்காலை ஆறுமணியளவில் கவி கவி என்ற சத்தம் கதவைத் திறந்த அவளுடைய அக்கா டேய் கவி என் தங்கச்சியை கடல் வரையும்அழைத்துட்டு போட என்றாள் என் உள்ளம் அப்படியே காத்துல மெதந்தது .அவள் சேலையில் அப்படியே செதுக்கிய செலைபோல் இருந்தாள் .அவளிடம் பேசிக் கொண்டே சென்றேன் . சிலு சிலுவெனும் காற்று அவள் இதழ் நடுங்கியது அதனை நான்ரசித்துக்கொண்டு சென்றேன் அவள் கால் பதியும் இடத்தில் என் மனதைப் பதியவைத்து அவள் பின்னே சென்றேன் .பிறகுகடல் கரையோரம் அமர்ந்து அந்த அலைகளின் ஓசையைக் கேட்டு கொண்டு இருந்தோம்.அப்போது தான் அதிகாலையில்அவ்வளவு அழகாய் இருக்கு என்று உணர்ந்தேன் .அவள் கடல் ரசித்துக் கொண்டு இருந்தாள் நான் அவளை ரசித்துக்கொண்டு இருந்தேன் எனக்கு திடீரென ஒரு காதல் அலை வந்தது உடனே அவள் அருகில் அமர்ந்து விரல் இடையில்விரல் கோர்த்தேன் அவள் வேண்டாம் என்றாள் .இமை இடையில் விழிகோர்த்து ,மை பூசிய வானத்தைத் தோரணைகளாகஅமைத்து ,கடல் அலைகள் இசை இசைத்து காற்றால் தென்றலை தோற்றுவித்து சூரியனின் ஓளியால் அவளின் விழியைப்பார்த்து என் காதலை பதித்தேன் அவள் இதழில் அன்று.அவள் நினைவோடு இன்று அவளின் கல்லறையின் மீது .என்உள்ளத்தால் உணர்வாள் அவளை ரசிக்கிறேன் என்றும்….

எழுதியவர் : shanmugavel (8-Feb-17, 4:22 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 775

மேலே