மனித மிருகங்களே, கொஞ்சம் விழித்தெழுங்களே,

உணர்வை கட்டுப்படுத்த முடியாத அனைவரும் தவறு செய்யத் துணிகிறார்களே...
பேசும் வார்த்தையில் கண்ணியமில்லாதவர் நிச்சயமாக மனதில் குப்பை மட்டுமே நிரம்பப் பெற்றவரே....

கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாததவரே,
பிறருடைய மனதையும், உடலையும் இரணப்படுத்தி மகிழ்கிறார்.....

மனித மிருகங்களே...
கொஞ்சம் விழித்தெழுங்களே....

முறையான வாழ்வை வாழ முன் வாருங்களே....
அனைத்து உயிர்களிலும் சகோதரத்துவம் காணுங்களே....

ஆசை கொண்டு, அதன் பேரில் வெறியை வளர்த்து நீங்கள் செய்ய நினைப்பதெல்லாம்,
நிரந்தரமற்ற இந்த அற்ப உடலுக்காகவே....

மனமே உடலை ஆட்சி செய்ய வேண்டுமே...
பகுத்தறிவே அந்த மனதை ஆட்சி செய்ய வேண்டுமே....
நல்ல, சிறந்த பகுத்தறிவின் வெளிப்பாடு ஆக்கப்பூர்வமான சிந்தனையில் வெளிப்படுமே.....

ஆனால், இந்த உலகமோ, தவறுக்குத் தவறு, பழிக்குப் பழியென பரிகாரம் தேடி, நீதியை நிலைநாட்டத் துடிக்கிறதே....

நீதியென்பது அன்பால், கருணையால் வழங்கப்பெறுவதே.....
நித்தமும் கடின வார்த்தைகளால் பிறருடைய மனதைப் புண்படுத்தும் மானிடர்களே,
நாவடக்கம் பற்றி அறிவீரோ???....

நாவடக்கமே நல்லொழுக்கத்தின் தொடக்கமாகுமே....
நாவடக்கமில்லாதோரெல்லாம் ஒழுக்கங்கெட்டவர்களென்ற பட்டியலில் இடம் பெறுவார்களே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Feb-17, 12:55 am)
பார்வை : 653

மேலே