அசகசமப்பா

ஜாதி மதம் நிறம்
ஏழை பணக்காரன்
படித்தவன் பாமரன்
கோழை வீரன்
என்ற வேற்றுமை எனக்கில்லை
உண்மையான அரசியல் வாதி...
நான்...

அனைவரையும் ஒன்று போல்
கவனிக்கும் என்னை
சீ போ......கொசு என்று
விரட்டினாலும்....
கொள்கை மாறமாட்டேன்
உங்களை விட்டு போகவும் மாட்டேன்
அரசியலின் ருசியை
நன்கு புரிந்துகொண்டேன்
எனது நோக்கம் பதவியே...

எழுதியவர் : Rajeswariskumar (10-Feb-17, 3:56 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 83

மேலே