இனியாவது ஒண்ணு கூடட்டும்

வெள்ளம் இல்லாம தவிச்சுட்டேன்
வெயிலு பட்டு கருஞ்சிட்டேன்
வேரு புடிச்ச மண்ணுக்கு
வெவரம் சொல்லும் முன்னே
வேதனையில சாஞ்சுட்டேன்
வெதச்சவன் வந்து பார்க்கையில
சீவன் இல்லாம கிடந்துட்டேன்
பார்த்த சீவன் சீவன போக்கிடிடுச்சே,,!
மண்ணோடு உழைச்ச புழு
மண்ணோடு போயாச்சு
கதிரு உசந்த நிலத்துல
கல்லறைதான் உசந்தாச்சு
தண்ணி தராத அரசாங்கம்
கல்லறைக்க மேல
தார் சால போட்டாச்சு
அரசாங்கம் எத்தனையோ
அடுக்கடுக்கா மாறியாச்சு
சின்ன சாலையும் அகலமாச்சு
எங்க சந்ததியும் குறைஞ்சாச்சு
தொழுவதற்கு இடம் கொடுத்த சனம்
உழுவதற்கு இடம் கொடுக்கலையே
நொடிக்கு நொடி
கொடி அறுற பிள்ளைக்கு - எந்த
கொடியா மாறி என்ன படி கொடுக்க
பட்டினியில பிறழாம – எந்த
பச்ச மடியில தாலாட்ட
பூமியில மனுசங்க கும்பிடுற சாமிகளா
கொடுங்கய்யா எங்களுக்கும் ஒரு வரம்
ஒரு குடம் நீராவது
வயலுக்கு வழங்குமய்யா
வெவசாயி விதைச்ச நிலம்
முழுசா முப்போகம் விளையட்டும்
சாமிகள கும்பிடவாவது
மனுசருக்கு உசிரு இருக்கட்டும்
உருவாகிற கரு
உயிரோட வாழட்டும்
வெவசாயி எண்ணிக்கை
இனியாவது ஒண்ணு கூடட்டும்

எழுதியவர் : செ.பா.சிவராசன் (10-Feb-17, 10:12 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 615

மேலே